கிழக்கு இந்தோனேசியாவில் இன்று காலை 6.2 ரிச்டர் அளவு கோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பசுபிக் நெருப்பு வலைய பகுதியில் உள்ள இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை சீற்றம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்றன.

 இந்நிலையில், இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

திமோர் தீவில் உள்ள குபாங் நகரில் இருந்து வடமேற்கில் 133 கிலோ மீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. 

இது ரிச்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவாகியிருந்தது. 

நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேத விவரம் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.