பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் இந்திய  அணித் தலைவர் விராட் கோலி வேகமக 11 ஆயிரம் ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையை புரிந்துள்ளார்.

ஐ.சி.சி 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 22 ஆவது போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்தியா, சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று மான்செஸ்டரில் இடம்பெற்றது. 

இப் போட்டியில் இந்திய அணித் தலைவர் விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் வேகமாக 11 ஆயிரம் ஓட்டங்களை கடந்து புதிய சாதனையை படைத்தார். 

ஏற்கெனவே இந்திய அணியின் முன்னாள் தலைவர் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 276 ஆட்டங்களில் 11,000 ஓட்டங்களை கடந்து சாதனை படைத்திருதார். இந் நிலையில் அந்த சாதனையை விராட் கோலி வெறும் 222 ஆட்டங்களில் ஆடி முறிடியத்துள்ளார்.

அத்துடன் சச்சின், கங்குலியுடன் 11 ஆயிரம் ஓட்டங்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையையும், சர்வதேச அளவில் 9 ஆவது வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார்.