மலையக தலைமைகளின் அதிகாரப்போட்டியே மக்களின் உரிமைகள் பறிபோகக் காரணம் ; இராமலிங்கம் சந்திரசேகர்

Published By: Digital Desk 4

17 Jun, 2019 | 12:02 PM
image

மலை­யக அர­சி­யல்­வா­திகள் தமது சுய­ந­லத்­திற்­காக மக்­களைப் பிரித்­தா­ளு­கின்­றனர். இத்­த­கை­யோரின் பிற்­போக்­கான செயற்­பா­டுகள் மற்றும் இணக்­கப்­பா­டற்ற தன்மை என்­பன மலை­யக மக்­களின் உரி­மைகள் பறி­போ­வ­தற்கு உந்து சக்­தி­யாக அமைந்­துள்­ளன. 

முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளி­டையே ஏற்­பட்ட ஒற்­றுமை வடக்கு மற்றும் மலை­யக அர­சி­யல்­வா­தி­க­ளி­டையே ஏற்­ப­ட­வில்லை என்­பதே வெளிப்­ப­டை­யான உண்மை  என்று ஜே.வி.பி.யின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், மத்­திய குழு உறுப்­பி­ன­ரு­மான இரா­ம­லிங்கம் சந்­தி­ர­சேகர் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

நாட்டில் பேரி­ன­வாதம் தற்­போது தலை­வி­ரித்­தா­டு­கின்­றது. பேரி­ன­வா­தி­களின் மேலெ­ழும்­புகை நிலை­யா­னது சிறு­பான்மை மக்­க­ளி­டையே ஒரு அச்ச உணர்வை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. தமது எதிர்­காலம் எவ்­வாறு அமை­யுமோ? என்­கிற கேள்­விக்கு மத்­தியில் சிறு­பான்மைச் சமூ­கத்­தி­னரின் வாழ்க்கை தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. எந்த நேரத்­திலும் எதுவும் நடக்­கலாம் என்ற நிலை ஏற்­பட்­டுள்­ளது. உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற விரும்­பத்­த­காத சம்­ப­வங்­களைத் தொடர்ந்து நாட்டில்  பதற்ற சூழ்­நிலை இருந்து வரு­கின்­றது. முஸ்லிம் மக்கள் எதிர்­நோக்கும் நெருக்­கீ­டுகள் அம்­மக்­களை நிலை­கு­லையச் செய்­தி­ருக்­கின்­றன. உயிர்த்த ஞாயிறு சம்­ப­வத்தைத் தொடர்ந்து இந்­நாட்டில் முஸ்­லிம்கள் மீது கட்­ட­விழ்த்து விடப்­பட்ட வன்­மு­றைகள் இந்­நாட்டில் சிறு­பான்­மை­யினர் வாழ்­வ­தற்குப் பொருத்­த­மான ஒரு நாடு­தானா? என்று சிந்­திக்க வைத்­தி­ருக்­கின்­றது. 

உயிர்த்த ஞாயிறு சம்­ப­வத்தைத் தொடர்ந்து இன­வா­திகள் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் மீதும் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தத் தவ­ற­வில்லை. அமைச்சர் ரிசாட் பதி­யுதீன் மற்றும் ஆளு­நர்­க­ளான ஹிஸ்­புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோர் பதவி வில­க­வேண்டும் என்று அழுத்தம் கொடுத்­தனர். இதில் அவர்கள் வெற்­றியும் கண்­டனர். இதன்­போது ஒட்­டு­மொத்த முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் கட்சி பேதங்­களை மறந்து சமூக ஒற்­று­மையை வெளிப்­ப­டுத்­தினர். மலை­யக அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு இது ஒரு நல்ல பாட­மாகும். அமைச்சுப் பத­விக்­கா­கவும், ஏனைய சுக­போ­கங்­க­ளுக்­கா­கவும் சமூ­கத்தைக் காட்­டிக்­கொ­டுக்கும், சமூ­கத்­தி­ன­ரி­டையே பிள­வினை ஏற்­ப­டுத்தும் சில மலை­யக அர­சி­யல்­வா­திகள் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களின் ஒற்­று­மையை படிப்­பி­னை­யாகக் கொள்ள வேண்டும்.

மலை­யக மக்­களின் தேவைகள் அதி­க­முள்­ளன. தீர்க்­கப்­ப­டாத பிரச்­சி­னைகள் அதி­க­முள்­ளன. இவற்­றுக்கு தீர்­வினைப் பெற்­றுக்­கொ­டுக்க ஐக்­கி­யமே அவ­சி­ய­மாகும். தோட்டத் தொழி­லாளர் சம்­பள விட­யத்தில் மலை­யகக் கட்­சிகள் எதிரும் புதி­ரு­மா­கவே செயற்­பட்­டன. ஒன்­றி­ணைந்­த­போக்கு காணப்­ப­ட­வில்லை. உதட்­ட­ளவில் ஒற்­றுமை குறித்து மலை­யகக் கட்­சிகள் பேசி­னவே தவிர உள அளவில் வேறு­பா­டு­களே அதி­க­மாகக் காணப்­பட்­டன. ஒரு கட்சி இன்­னொரு கட்­சியின் மீது சேறு பூசும் நட­வ­டிக்­கை­யினை மேற்­கொண்­டி­ருந்­தது. தொழி­லா­ளர்­க­ளுக்கு நியா­ய­மான சம்­ப­ளத்தைப் பெற்­றுக்­கொ­டுப்­பதில் கட்­சி­களின் முன்­னெ­டுப்­புகள் போது­மா­ன­தாக இல்லை. மலை­யகக் கட்­சிகள் சுய இலா­பத்­தினை மறந்து ஒன்­று­பட்டு குரல் கொடுத்­தி­ருந்தால் நியா­ய­மான சம்­ப­ளத்தைப் பெற்­றுக்­கொள்ளக் கூடி­ய­தாக இருந்­தி­ருக்கும் என்­ப­தனை மறுப்­ப­தற்­கில்லை. 

முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளி­டையே ஏற்­பட்ட ஒற்­றுமை வடக்கு மற்றும் மலையக அரசியல்வாதிக ளிடையே ஏற்படவில்லை என்பது வெளிப்படையான உண்மை. இனியும் ஏற்படுமா? என்பதும் சந்தே கமே. வடக்கு மக்களின் பிரச்சினைகள் அதிக முள்ள நிலையில் இப்பகுதி அரசியல்வாதிகள் கைகோர்த்து முன்செல்ல வேண்டும். இதேவேளை மலையகத்தில் ஆற்றல்மிக்க மக்களின் நலன்பேணும் தலைமைத் துவங்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும். இதன் மூலம் மலையக மக்களின் வாழ்வில் அபிவிருத்தி ஏற் படும் என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13