அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து த.தே.கூ ஆராய்கிறது !

Published By: R. Kalaichelvan

17 Jun, 2019 | 11:37 AM
image

அர­சாங்­கத்தின் மீதான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை குறித்தும், கூட்டமைப்பின் இந்­திய  விஜயம் குறித்தும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழு நாளை கூடி ஆரா­ய­வுள்­ளது.

 அர­சாங்­கத்தின் மீதான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை மக்கள் விடு­தலை முன்­னணி கொண்­டு­வந்­துள்ள நிலையில் அந்த பிரே­ரணை  அடுத்த மாதம் 9-10ஆம் திக­தி­களில் பாரா­ளு­மன்ற விவா­தத்­திற்கு எடுத்­து­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. 

இது குறித்து பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்­சிகள் தத்­த­மது கருத்­துக்­களை முன்­வைத்து வரு­கின்ற நிலையில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு இந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை குறித்து ஆரா­ய­வுள்­ள­தாக  குறிப்­பிட்­டுள்­ளது. 

நாளை நண்­பகல்  பாரா­ளு­மன்ற அமர்வு கூட­வுள்ள நிலையில் அதற்கு முன்னர் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற குழுக் கூட்டம் கூடு­கின்­றது. 

இதன்­போது இந்த விட­யங்­களை தாம் ஆரா­ய­வுள்­ள­தாக மாவை சேனா­தி­ராஜா எம்.பி தெரி­வித்தார். 

அண்­மையில் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி இலங்­கைக்­கான விஜயம் ஒன்­றினை மேற்­கொண்­டி­ருந்த நிலையில் தமிழர் தரப்பின் சார்பில் சந்திப்பை முன்­னெ­டுத்த தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பினர் தமிழ் மக்­களின் அர­சியல் தீர்­வுகள் குறித்து தலை­யீ­டு­களை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்­வைத்­தி­ருந்­தனர். 

இது குறித்து ஆழ­மா­னதும் ஆரோக்­கி­ய­மான கலந்­து­ரை­யாடல் ஒன்­றினை முன்­னெ­டுக்க டெல்­லிக்கு வரு­மாறு இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி அழைப்பு விடுத்­தி­ருந்தார். 

ஆகவே இது குறித்தும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் நகர்­வுகள் குறித்தும் சந்திப்புகளை மேற்கொள்ளும் கால கட்டம் குறித்தும் ஆராயவும் நாளைய பாராளுமன்ற குழுக் கூட்டத்தை பயன்படுத்திக்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22