ரோஹித்தின் அதிரடியில் மும்பையிடம் வீழ்ந்தது புனே

Published By: Raam

02 May, 2016 | 08:02 AM
image

டோனி தலைமையிலான புனே அணி இந்த அளவுக்கு திணறும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். இதுவரையில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள புனே அணி அதில் 6 போட்டிகளில் மண்ணை கௌவியது. எஞ்சிய 6 போட்டிகளில் குறைந்தது 5 அல்லது 6 ஆட்டங்களில் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது புனே.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற குஜராத்துக்கு எதிரான போட்டியில் 195 ஓட்டங்கள் குவித்த போதிலும் பந்து வீச்சில் சோடை போனதால் தோல்வியை சந்திக்க வேண்டியதாயிற்று புனே அணிக்கு. அதேபோல் நேற்று மும்பை அணிக்கெதிரான போட்டியில் 160 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது புனே.

ஆனாலும் இதில் மும்பை அணித் தலைவர் ரோஹித் ஷர்மா அதிரடியாக ஆடி புனே அணியை வீழ்த்தினர்.

நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டோனி தலைமையிலான புனே அணியின் திவாரி(57), ஸ்மித்(45), டோனி (24), திஸர(12) என ஓட்டங்கள் எடுக்க 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களைச் சேர்த்தது.

160 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய மும்பை அணி 18.3 ஓவர்களில 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 161 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது. இதில் ரோஹித் ஷர்மா 85 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். மற்ற வீரர்களான பட்டேல் (21), ராயுடு (22) மற்றும் ரோஹித்துக்கு துணை நின்ற பட்லர் 27 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31