உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; ஐ.எஸ். அமைப்பு நேரடியாக தொடர்புபடவில்லை

Published By: R. Kalaichelvan

17 Jun, 2019 | 01:00 PM
image

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு நேரடியாக ஈடுப்படவில்லை என புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து புலனாய்வுத்துறை அதிகாரியொருவர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்துத்தெரிவித்துள்ளதாக கொழும்பு கெசற் என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இலங்கையில் உள்ள உள்ளூர் குழுவொன்றினால் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் உறுதியாகியுள்ளதாக அந்த புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் தற்கொலைக் குண்டுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் இங்கிருந்த இந்தோனேசிய வழியாக அனுப்பப்பட்ட காணொளிகளே ஐ.எஸ் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. இந்நிலையிலேயே இலங்கை தாக்குதல்களுக்கு ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அல் பாக்தாதி  உரிமை கோரியிருந்தார்.

இருப்பினும் இலங்கையில் உள்ள உள்ளூர் பயங்கரவாத வலையமைப்பு அல் பாக்தாதி தலைமையில் செயற்படவில்லையெனவும் ஆனால், ஐ.எஸ். நேரடியாக தொடர்புகளைப் பேணாத போதிலும் ஒரு சில தொடர்புகளை பேணியிருக்கலாமெனவும்,அவர்கள் உண்மையான ஐ.எஸ். அமைப்பின் உறுப்பினர்கள் அல்லவெனவும் அந்த புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஹோட்டல் மற்றும் தேவாலயங்களை குறிவைத்து உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டதாக தேசிய தௌவ்ஹீத் ஜமாஅத் (என்.டி.ஜே) மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில்,தாக்குதல்களில் கொல்லப்பட்ட தற்கொலைக் குண்டுதாரிகளில் தேசிய தௌஹீத் ஜமா அத்தின் தலைவர் சஹ்ரான் ஹாஷிம் என்பவரும் ஒருவர் எனவும் அவர் வீடியோ காணொளிகள் மற்றும் ஏனைய பிரச்சார உத்திகள் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் சித்தாந்தத்தை ஊக்குவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மனிதாபிமான உதவி!

2025-12-16 11:34:02
news-image

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு பிணை!

2025-12-16 11:22:54
news-image

அம்பிட்டிய சமண ரத்ன தேரருக்கு பிடியாணை

2025-12-16 11:35:21
news-image

கம்போடியா - தாய்லாந்து யுத்தம் நிறுத்தக்...

2025-12-16 10:33:26
news-image

இலங்கைக்கும் கசகஸ்தான் குடியரசுக்கும் இடையிலான உறவைப்...

2025-12-16 10:34:43
news-image

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட்...

2025-12-16 10:27:32
news-image

பண்டிகை காலத்தில் வழிபாட்டுத் தலங்களில் விசேட...

2025-12-16 10:19:20
news-image

135 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட...

2025-12-16 10:09:02
news-image

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார...

2025-12-16 10:06:19
news-image

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேகநபருடன்...

2025-12-16 09:57:17
news-image

நீரில் மூழ்கி ஒருவர் மாயம்

2025-12-16 09:39:03
news-image

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்க...

2025-12-16 09:38:28