கொக்குவில் ரயில் நிலைய அதிகாரி மீது தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொக்குவில் சந்திக்கு அண்மையில் உள்ள முச்சக்கரவண்டித் திருத்தகத்தில் கொக்குவில் ரயில் நிலைய அதிபர் நின்றபோது 8 பேர் கொண்ட கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸார், சந்தேக நபர்கள் தலைமறைவாகியிருந்தனர் 

இந்நிலையில், யாழ்ப் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரின் கீழான பொலிஸ் பிரிவு , சந்தேக நபர்களில் ஒருவரைக் கைது செய்துள்ளது. 

சுன்னாகம் பொலிஸ் பிரிவிலுள்ள அவரது வீட்டில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும், விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் யாழ்ப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சந்தேக நபர் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.