(நா.தினுஷா) 

ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர்  கபீர் ஹசிம்  சகல இன மக்களதும்  ஆதரவை பெற்ற சிறந்த அரசியல் தலைவர். ஐக்கிய தேசிய கட்சியினதும் நாட்டினதும் சிறந்த எதிர்காலத்துக்கான  புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு  உரிய காலம் இதுவாகும்.  

ஆகவே   மீண்டும் அவர்  தனது அமைச்சு பதவியை   பொறுப்பேற்க வேண்டும்  என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் அந்த கட்சியின் பிரதி தலைவருமான சஜித் பிரேமதாச  ஆலோசனை   வழங்கியுள்ளார். 

இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னாள் அமைச்சர் கபீர் ஹசிமிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது  

பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசிம்  ஏன் இந்த தீர்மானத்தை எடுத்தார் என்பதை புரிந்தக்கொள்ள முடிகிறது. அவருடன் உள்ள ஏனைய சகோதர அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் போது தார்மீக மனபான்மையுடன் கொள்கை ரீதியான நீதியை பின்பற்றும் மனிதர் என்ற வகையில்  ஒற்றுமைக்காக அவர்களுடன் செற்படுவதற்கு முன்வந்துள்ளார். 

  ஐக்கிய தேசிய கட்சியனதும் , நாட்டினதும்  எதிர்கால தலைவரை தெரிவுசெய்யும் காலம் இதுவாகும். புதிய அரசியல் எதிர்காலத்தை நோக்கி நாட்டை முன்னெடுத்து செல்வதற்கு   ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் கபீர் ஹசிம் விரைந்து மீண்டும் தனது அமைச்சு பதவியை பொறுப்பேற்க வேண்டும்.  எனத் தெரிவித்துள்ளார்.