(எம்.எப்.எம்.பஸீர்)

தடை செய்யப்பட்டுள்ள தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் வெலிமடையில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்ப்ட்டுள்ளார்.

 

21 வயதான வெலிமடை, பொரகஸ் - சில்மியாபுர, பதூரியா மாவத்தையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபர்  மாதம்பை பகுதியில் அரபுக் கல்லூரியில் கல்வி கற்று வருபவர் எனவும், சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து தருவதாகவும் பொலிஸார் கூறினர். 

பொலிசார் முன்னெடுத்த ஆரம்பகட்ட விசாரணைகளில், பயங்கரவாதி சஹ்ரானின் ஏற்பாடு செய்த உபதேச பயிறிசிகள் பலவற்றில்  சந்தேக நபர் பங்கேற்றுள்ளமை குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இந் நிலையில் சந்தேக நபரிடம்  தொடர் விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் பொலிசார் கூறினர்.