(எம்.ஆர்.எம்.வஸீம்)

மகாநாயக்க தேரர்களின் கோரிக்கை மற்றும் கட்சி ஆதரவாளர்களின் அழுத்தத்தை கருத்திற்கொண்டு அமைச்சுப் பதவிகளை மீண்டும் பெற்றுக்கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தீர்மானிப்போம் என முன்னாள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.

அமைச்சுப்பதவிகளை மீண்டும் ஏற்றுக்காெள்ளுமாறு மகாநாயக்க தேரர்களின் கோரிக்கை மற்றும் கட்சி ஆதரவாளர்கள் அழுத்த தெரிவித்துவரும் நிலையில் அடுத்த கட்ட நிலைமை தொடர்பாக வினவியபோதே அவர் இவ்வாறு தெவித்தார்.