(எம்.மனோசித்ரா)

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலால் ஏற்பட்ட நெருக்கடிகளை விட , தாக்குதல்களுக்கான காரணம் குறித்து ஆராய்வதில் நாடு பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். 

இடம்பெற்ற தாக்குதல்களை தடுக்காதமையால் ஏற்பட்ட பிரச்சினையை விட தற்போது, அதற்கான காரணத்தை கண்டறியவதில் நாட்டில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாடு ஸ்திரமற்றுப் போயுள்ளது. நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக் கூடிய இளைஞர்களிடத்தில் நாடு ஒப்படைக்கப்பட வேண்டும். அந்த இளைஞர்கள் மதவாதிகளாக இருக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.