(நா.தினுஷா)

அரச சேவையிலிருந்து இதுவரையில் ஓய்வுப்பெற்றுள்ள சகல அதிகாரிகளுக்குமான ஓய்வூதிய கொடுப்பனவுகளை எதிர்வரும் ஜூலை மாதம் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. 

2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னரும்  இதன் பின்னரும்  ஓய்வுப்பெற்ற அரச தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்  ஓய்வூதிகொடுப்பனவுகளில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும்  வகையிலேயே இந்த கொடுப்பனவுகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக   2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வுப்பெற்ற 500,000 பேருக்கு ஓய்வூதிய கொடுப்பனவுகள்  அதிகரிக்கப்படவுள்ளதுடன் 2,800 ரூபாவிலிருந்து 20,000 வரையில் ஓய்வூதியத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.