(இராஜதுரை ஹஷான்)

பயங்கரவாதிகளை பிரத்தியேகமாக பாதுகாத்து, மக்களின் அடிப்படை உரிமைகளை பலவந்தமாக முடக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை  உருவாக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அத்துடன்  நடைமுறையில் உள்ள  பயங்கரவாத தடைச்சட்டத்தை  நீக்குவதால் பாரிய எதிர்விளைவுகள் ஏற்படும்.   பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டால். உரிமைகளுக்காகவும், அரசாங்கத்திற்கு எதிராக  போராட்டங்களை முன்னெடுக்க முடியாது. 

போராட்டங்களில் ஈடுப்படும் போது அரச சொத்துக்களுக்கு ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்பட்டால் பயங்கரவாதிகள் என்று கருதி  கடூழிய சிறை தண்டனை  வழங்கும் ஏற்பாடுகள்  காணப்படுகின்றது. மறுபுறம்  பயங்கரவாதிகளை  எவ்வாறு அணுக வேண்டும் என்று பிரத்தியேக ஏற்பாடுகள்  உள்ளடக்கப்பட்டுள்ளமை  சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டினை இல்லாதொழிப்பதாகும் என்றும் குறிப்பிட்டார்.