(செ.தேன்மொழி)

பொலன்னறுவ - பகமூன பகுதியில் நபரொருவர் பெண்ணொருவரை கோடரியால் தாக்கி கொலை செய்துவிட்டு அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பகமுன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியின் வீடொன்றில் இன்று அதிகாலை தற்காலிகமாக தங்கியிருந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.  

குறித்த பெண்ணுக்கும் அவரடைய காதலனுக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறிய நிலையில்  காதலனான குறித்த ஆண் கோடரியால் தாக்கியுள்ளார். 

தாக்குதலுக்கு உள்ளான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் பெண்ணின் காலதன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

பகமுன பகுதியை சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவரும் 35 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைளையும் முன்னெடுத்து வருகின்றனர்.