மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பாரதி வீதியில் அமைந்துள்ள மயானத்தில் சீயோன் தேவாலய தற்கொலை தாரியின் உடல் பாகத்தினை புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் இன்று அப்பகுதியில் எதிர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

இன்று காலை குறித்த பகுதியில் சீயோன் தேவாலய தற்கொலை தாரியின் உடல் பாகத்தினை புதைப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் ஒன்றுகூடிய பிரதேச மக்கள் மாநகரசபை உறுப்பினர்கள் இந்த கவனஈர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.

வீதிகளில் டயர்களை எரித்தும் வீதிகளை மறித்தும் நடைபெற்ற இந்த போராட்டத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டது.

சீயோன் தேவாலய தற்கொலை தாரியின் உடல் பாகத்தினை மட்டக்களப்பில் புதைப்பதற்கான நடவடிக்கையில் பொலிஸார் நடவடிக்கைகள் முன்னெடுத்துவரும் நிலையில் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருவதும் குறிப்பிடத்தக்கது.