(செ.தேன்மொழி)

ஹொரனை பகுதியில் நிதி நிறுவனமொன்றில் கொள்ளையிட முயற்சித்த ஒருவர் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹொரனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாணந்துரை வீதியில் அமைந்துள்ள நிதி நிறுவனத்தில் இன்று கொள்ளையிட வந்த ஒருவரே இவ்வாறு பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார்  என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. 

பொகுனுவிட பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் பொலிஸாரின் பாதுகாப்பில் ஹொரனை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதேவேளை சந்தேக நபர் கொள்ளையிடுவதற்காக கொண்டுவந்த ஆயுதங்களை பொலிஸார் சோதனைக்குட்படுத்திய போது, சந்தேக நபர் வைத்திருந்த துப்பாக்கி போலி துப்பாக்கி எனவும் தெரியிவந்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.