ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்தால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு தயார் என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு இதுவரை தான் எந்த விண்ணப்பமும் முன்வைக்கவில்லை எனவும் கட்சியின் தலைமைத்துவத்துடன் தனது பெயர் பிரேரிக்கப்பட்டால் அது குறித்து ஆராய தயார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

பி.பி.சி. சிங்கள சேவையுடன் இடம்பெற்ற விசேட செவ்வியொன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.