ஐ.சி.சி 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 22 ஆவது போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்தியா, சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

உலக கிண்ணத் தொடரில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு மான்செஸ்டரில் ஆரம்பமாகவுள்ளது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தேர்வுசெய்துள்ள நிலையில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.