யாழ்ப்பாணம் கொய்யாத் தோட்டப் பகுதியில் உள்ளூர் தயாரிப்பு வெடிபொருட்கள் சிலவற்றை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

கொய்யாத் தோட்டப் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த வெடிபொருட்களைக் கடற்படையினர் மீட்டுள்ளனர். 

மேலும் இந்த வெடிபொருட்களைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி மீன் பிடிப்பதற்காக இவற்றை மறைத்து வைத்திருக்கலாம் எனக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.