அவுஸ்­தி­ரே­லி­யாவின் 'ப்ரேக்த்ரூ நேஷனல் சென்டர் ஃபோர் க்ளைமேட் ரிஸ்­டோ­ரேஷன்' (Breakthrough National Centre for Climate Restoration) என்ற சுயா­தீன பரு­வ­நிலை மீட்­டு­ரு­வாக்க அமைப்பு, சமீ­பத்தில் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில், மனித இனத்­துக்கு 31 ஆண்­டு­களே எஞ்­சி­யுள்­ளன என்ற அதிர்ச்­சி­தரும் தக­வலை வெளி­யிட்­டுள்­ளது. அதன்­படி 2050-ஆம் ஆண்டில் 90 சத­வி­கித மக்­கள்­தொகை அழிந்­து­விடும் என அந்த அறிக்கை கூறி­யுள்­ளது.

இந்த நக­ரங்­க­ளெல்லாம் 2050-இல் அழிந்­து­வி­டுமாம்... காரணம் இதுதான் எனவும் சில கார­ணங்­களை தெரி­வித்­துள்­ளது!

நிலம், இனம், மொழி என இயற்கை தந்த பிரி­வு­க­ளுக்கும், சாதி, மதம், நாடு என மனி­தனே உரு­வாக்­கிக்­கொண்ட பிரி­வு­க­ளுக்கும் அப்­பாற்­பட்டு, உலகின் மொத்த மனித இனத்­துக்கும் பொது­வான அடை­யா­ள­மா­கவும் உணர்­வா­கவும் இருப்­பவை, அநே­க­மாகத் தாகமும் பசி­யும்தான். தண்ணீர், உணவு இரண்டின் இருப்பும் அத்­தனை இன்­றி­ய­மை­யா­தவை.

இப்­ப­டிப்­பட்ட தண்ணீர் பிரச்­சினை , இன்று ஓர் உலகப் பிரச்­சி­னை­யா­கவே மாறி­விட்­டது.

தண்ணீர் பஞ்சம் என்­றாலே, உடனே நம் நினை­வுக்கு வரு­பவை மத்­திய ஆ­பி­ரிக்க நாடுகள், தென் கிழக்­கா­சிய நாடுகள் உள்­ளிட்ட மூன்றாம் உலக நாடு­கள்தாம்.

ஆனால், இன்­றைய நிலை அதை­விட மோச­மா­கி­விட்­டது. தண்ணீர் இல்­லாத, ஒரு பேர­ழிவை நோக்கி புவி விரைந்­து­கொண்­டி­ருக்­கி­றது. ஆம், மனித இனம் தனக்­கான கடைசி சில ஆண்­டு­களில் வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கி­றது.

இது­வரை நாம் கேள்­விப்­பட்ட உயி­ரின அழிப்­பு­க­ளுக்குக் கார­ண­மான விண்­கற்­களோ, கடற்­கோள்­களோ, இயற்கைச் சீற்­றங்­களோ இந்த இன அழிப்­புக்குக் கார­ண­மாக இருக்­கப்­போ­வ­தில்லை. ஆனால், இம்­முறை மனி­தனின் அழி­வுக்குக் கார­ண­மாக மனி­தனே இருக்­கப்­போ­கிறான்.

மேலும், இந்தச் சிக்­கலின் தீவிரம் அறிந்தும், இது­கு­றித்த விழிப்­பு­ணர்வை ஐக்­கிய நாடுகள் மன்றம் வேண்­டு­மென்றே ஏற்­ப­டுத்த மறுக்­கி­றது என்றும் அந்த அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

நிலத்­தடி நீர்­மட்டம் வர­லாறு காணாத அள­வுக்குக் குறைந்­துள்­ளதும், புவியின் வெப்­ப­நிலை 3 முதல் 5 பாகை செல்­ஷியஸ் வரை உயர்ந்­துள்­ளதும் இதற்­கான முக்­கியக் கார­ணி­க­ளாக அந்த அமைப்பு சுட்­டிக்­காட்­டு­கி­றது. குறிப்­பாக, சூரிய ஒளியைத் தாங்கி மீண்டும் வளி மண்­ட­லத்­துக்கே பிர­தி­ப­லிக்கும் வட­து­ரு­வத்தின் ஆர்ட்டிக் படுக்­கையில் அமைந்­தி­ருக்கும் பனித்­தி­ரைகள், ஏற்­கெ­னவே மிக வேக­மாக உருகி, கரைந்­து­வ­ரு­கின்­றன, எனக் கூறி­யுள்ள அந்த அறிக்கை, அதனால் கடல்நீர் மட்டம் உயர்ந்­துள்­ள­தாகக் கூறி­யுள்­ளது.

இதன் தொடர்ச்­சி­யாக, புவியின் தட்­ப ­வெப்­ப­நிலை ஒவ்வோர் ஆண்டும், அதற்கு முந்­தைய ஆண்டு தொடாத ஒரு புதிய உச்­சத்தைத் தொடும் எனக் கூறு­கி­றது, அந்த மையம்.

இந்தச் சூழ­லியல், மாற்­றத்தின் முதல் நிலை தாக்கம் மேற்கு ஆபி­ரிக்கா மற்றும் மத்­திய கிழக்கு நாடு­கள்­மீது வெளிப்­படும் என்றும் அங்­குள்ள 1,000 கோடி மக்கள், தங்கள் நாட்­டை­விட்டு வெளி­யேறி வேறு நாடு­க­ளுக்கு நிரந்­த­ர­மாகப் புலம்­பெ­யர வேண்­டிய சூழல் உரு­வாகும் என்றும் சொல்­லப்­ப­டு­கி­றது.

இந்த அறிக்­கையின் மற்­றொரு திடுக்­கிடும் அம்­ச­மாகப் பார்க்­கப்­ப­டு­வது, இதனால் அழி­யப்­போகும் நிலங்­கள்தாம். வெப்­ப­நிலை உயர்வும் அதனால் நேரும் கடல் நீர்­மட்ட உயர்வும், நேர­டி­யாக ஆசி­யாவின் வங்­க­தே­சத்­தையும், அமெ­ரிக்­காவின் ஃப்ளோரி­டா­வையும் தண்­ணீ­ருக்குள் மூழ்­க­டித்­து­விடும். அது­மட்­டு­மல்­லாமல், தண்ணீர் பஞ்­சத்­தினால் ஷாங்காய், மும்பை, லாகோஸ் போன்ற சர்­வ­தேச நக­ரங்­களின் மக்கள் எல்­லோரும் 'பரு­வ­மாற்ற அக­திகள்' என்ற நிலைக்கு மாறி­வி­டு­வார்கள் என்றும் ஒரு பய­மு­றுத்தும் தகவல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இறு­தியில், உலகம் முழு­வ­தையும் தொடர்ந்து 20 நாட்­க­ளுக்கு வெப்ப அலைகள் சூழ்ந்­து­கொள்ளும். இந்த அலை­க­ளுக்கு 80 முதல் 90 சத­வி­கித மக்கள் பலியாவார்கள் என்றும் அந்த அறிக்கை ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கே அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு தகவலையும் கூறியுள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள இந்த சுயாதீன சூழலியல் மையம், இதற்கான தீர்வாக, புவியைக் காக்க மனிதனின் விரைவான எதிர்வினை ஒன்றை மட்டுமே முன்மொழிந்துள்ளது. இது புவி வெப்பமாதல் குறித்து தீவிரமாக ஆலோசிக்கவேண்டிய காலகட்டமாகும்.