இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியா அணி 334 ஓட்டங்களைக் குவித்துள்ளது. 

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 20 ஆவது போட்டி ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியாஇ திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணிகளுக்கிடையே இன்று மாலை 3 மணிக்கு இலட்டனின் ஓவல் மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தேர்வுசெய்துள்ள நிலையில் அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 334 ஓட்டங்களை குவித்தது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் அணித் தலைவர் ஆரோன் பிஞ்ச் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 132 பந்துகளில் 15 நான்கு ஓட்டங்கள் 5 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 153 ஓட்டங்களையும் ஸ்மித் 73 ஓட்டங்களையும் மெக்ஸ்வெல் 46 ஓட்டங்களையும் டேவிட் வோர்ணர் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா, இசுறு உதான ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மலிங்க ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 335 ஓட்டங்களை அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது.