தமிழகம் முழுவதும் நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை களைய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக தேனியில் அவர் தெரிவித்ததாவது,

“தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை போக்க அரசு துரிதமாக செயற்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக குடி மராமத்து பணி செய்ய 500 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் குடிநீர் தட்டுப்பாடு நிலைவரம் குறித்து அறிக்கை கேட்டுள்ளோம்.

அதன் அடிப்படையில் எந்தெந்த மாவட்டத்திற்கு முன்னுரிமை அளித்து, எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்யப்படும் என ஆய்வு செய்து, போர்க்கால அடிப்படையில் நிதி ஒதுக்கி, குடிநீர் தட்டுப்பாடு சீரமைக்கப்படும்.” என்றார்.