(இராஜதுரை ஹஷான்)

எம்மை  பழிவாங்கும் நோக்கில்  தூரநோக்கமற்ற விதத்தில்  நல்லாட்சி அரசாங்கம்  உருவாக்கிய அரசியலமைப்பின்  19வது திருத்தம்  இன்று பல  பிரச்சினைகளுக்கு மூல காரணியாக அமைகின்றது.

 மாகாண சபை தேர்தலை  நடத்தாமல் இருப்பது  பாரிய  ஜனநாயக உரிமை மீறளாகும்  இடம்பெறவுள்ள அனைத்து தேர்லையும் எதிர்க் கொள்ள தயார் என  எதிர்க்கட்சி தலைவர்  மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தங்காலை கால்டன் இல்லத்தில்   இன்று  இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் இடைப்பட்ட பதவி  காலத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் மக்களை பாதிக்கும்  வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் அரசாங்கததின்  தான்தோன்றித்தனமான செயற்பாட்டின் காரணமாக  ஜனாதிபதி  தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி   அமைச்சரவையினை   கூட்டவில்லை.  இதற்கு   19வது அரசியலமைப்பின் ஊடாகவே வழிமுறைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

எம்மை  பழிவாங்கும் நோக்கத்தில்  தூரமற்ற  அரசியல்  செயற்பாடுகள் மற்றும் ஏற்படும் எதிர்விளைவுகள் தொடர்பில் ஆராயாமல் அரசியலமைப்பின் 19வது திருத்தம்  கொண்டு வரப்பட்டது.    

கடந்த காலங்களில் ஏற்பட்ட பல  பிரச்சினைகளுக்கு இத்திருத்தமே  பிரதான காரணம். நிறைவேற்று துறைக்கும்,   சட்டவாக்க துறைக்கும் இன்று   அதிகாரம் தொடர்பிலும்   முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

 தேர்தலின் ஊடாகவே  ஆட்சி மாற்றம் ஏற்படும்.  இடம் பெற்று முடிந்த   உள்ளுராட்சி மன்ற தேர்தலை தொடர்ந்து காலம் தாழ்த்தப்பட்டுள்ள  மாகாண சபை தேர்தலே  இடம் பெற்றிருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.