குண்­டுத்­தாக்­கு­தலின் பின்னர் நாட்டின் நிலை­மைகள் தற்­போது சீர­டைந்து வரு­கின்­றன. எனவே அர­சாங்கம் தேசிய பாது­காப்பை மேலும் வலுப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கைகளில் தீவி­ர­மாக செயற்­பட்டு வரு­கின்­றது. கடந்தகால தவ­று­களை மறந்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­த­ம­ருடன் ஒன்­றிணைந்து செயற்­பட ஆரம்­பித்­துள்­ள­தாக தெரி­வித்த அமைச்சர் ராஜித சேனா­ரட்ன, ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் பட்­டி­யலில் சஜித் பிரே­ம­தா­சவும் ஒருவர் எனவும் குறிப்­பிட்டார். 

அமைச்சர் ராஜித சேனா­ரட்ன வீர­கே­சரி நாளி­த­ழுக்கு வழங்­கிய பிரத்தி­யேக செவ்­வி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

செவ்வி வரு­மாறு : 

கேள்வி : 2015 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பு ஏற்­றது முதல் அர­சியல் ரீதி­யா­கவும் சரி ஏனைய பொரு­ளா­தார, அபி­வி­ருத்தி  விட­யங்­க­ளிலும் சரி இந்த நல்­லாட்சி அர­சாங்கம் பல்­வேறு  சவால்­களின் மத்­தி­யி­லேயே நகர்ந்து கொண்டிருக்­கி­றது. இவ்­வா­றா­ன­தொரு நிலை­மை­யி­லேயே ஏப்ரல்  21 ஆம் திகதி குண்­டுத்­தாக்குல் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றன. இவ்­வாறு தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் ஏற்­ப­டு­வ­தற்கு பல்­வேறு கார­ணங்கள் பின்னணி­யாக இருந்­தி­ருக்­கலாம். இது தொடர்பில்  உங்­களின் நிலைப்­பாடு எவ்­வாறு உள்­ளது ? 

பதில் : நாட்டில் காணப்­பட்ட பார­தூ­ர­மான பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்­வு­காண்­ப­தற்­கா­கவும் தேசிய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணும் நோக்­கி­லேயே 2015 ஆம் ஆண்டு நல்­லாட்சி அர­சாங்கம் மற்றும் தேசிய அர­சாங்கம் உரு­வாக்கப்பட்டது. ஆனால் அர­சாங்­கத்­துக்குள் இருந்தே அர­சாங்­கத்­துக்கு எதி­ரான கருத்­துக்கள் முன்­வைக்­கப்­படும் போது அதனை மக்கள் ஏற்றுக்­கொள்­வார்கள். எதிர்த்­த­ரப்பில் இருந்து அர­சாங்­கத்­துக்கு எதிர்ப்பை வெளியி­டு­வது போன்று அது அமை­யாது. இந்த  நிலை­மையே தற்­போது எங்­களின் அர­சாங்­கத்­துக்கும்  நேர்ந்­துள்­ளது. தேசிய அர­சாங்­கத்­துக்கு ஆத­ர­வ­ளித்தே 2015 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யுடன் இணைந்து ஐ.தே.க. ஆட்சியமைத்தது. 

ஆனால் சிறிது காலத்­தி­லேயே அர­சே­ அர­சாங்­கத்தை எதிர்த்து செயற்­படும் நிலை உரு­வா­கி­யது. இவ்­வா­றா­ன­தொரு சந்­த­ர்ப்­பத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் மௌனித்­து­விட்டார்.  ஜனா­தி­ப­தியின் அ­மை­தி­யான செயற்­பா­டுகள் அனைத்தும்  ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் சுதந்­திர கட்­சிக்கும் இடையில் பிளவு ஏற்­படுவதற்கு வழி கோலியதுடன் அர­சாங்கம் இரண்­டாக உடைந்­தது. இரு தரப்­புக்கும் இடை­யி­லான தொடர் அர­சியல் கருத்து முரண்­பா­டு­க­ளுக்கு மத்­தியில் கடந்த வருட இறு­தியில் அர­சாங்­கத்­துக்கு எதி­ரான சூழ்ச்சி இடம்­பெற்­றது. இந்த நெருக்­கடி நிலை­மை­யி­லி­ருந்து நாடு இயல்பு நிலை­மைக்கு திரும்­பி­யி­ருந்த நிலை­யி­லேயே எதிர்­பா­ராத வித­மாக ஏப்ரல் 21ஆம் திகதி தாக்­குதல் சம்­ப­வங்கள் இடம்பெற்றன. அர­சியல் நெருக்­கடி நிலை­மையின் பின்னர் பாரிய அர­சியல் மாற்­றமும் ஏற்­பட்­டது. புதிய அமைச்­சுக்­களை பொறுப்­ப­ளிக்கும் போது  ஜனா­தி­பதி சட்ட ஒழுங்கு அமைச்சை அர­சாங்­கத்­துக்கு வழங்கவில்லை. அந்த அமைச்சை அவரின் பொறுப்பின் கீழ் வைத்­துக்­கொண்டார். மக்­களின்  ஆத­ரவோடும் நீதி­மன்­றத்தின் தீர்ப்­போடும்  அர­சாங்­கத்­துடன் தொடர்ந்து பய­ணிக்க ஜனாதிபதி ஒப்­புக்­கொண்டார். இருப்­பினும்  அர­சாங்­கத்­துக்கு தேவை­யான பலத்தை அவர் எங்­க­ளுடன் பகிர்ந்­து­கொள்ள விரும்பவில்லை. 

இதனைத் தொடர்ந்து தேசிய பாது­காப்பு சபை கூட்­டங்­களில் பிர­தமர் உள்­ளிட்ட பாது­காப்பு  ரா­ஜாங்க அமைச்­சரை பங்­கு­பற்ற இட­ம­ளிக்­க­வில்லை. எனவே பிர­தமர் உள்­ளிட்ட எங்­களின் தரப்­புக்­குப் பாது­காப்பு தொடர்பில்  எந்த பொறுப்பும் இருக்­க­வில்லை. பாது­காப்பு தொடர்­பான பலத்தை தன்­னி­டத்தில் வைத்­துக்­கொண்டு தனக்­கேற்ற வகையில் அவ­ருக்கு தேவை­யான குழு­வி­ன­ருடன் பாது­காப்பு தொடர்­பான தீர்­மா­னங்­களை எடுக்க ஆரம்­பித்தார். ஆனால் அர­சாங்­கத்­த­ரப்பில்  ஜனா­தி­ப­திக்கு ஆத­ர­வ­ளிக்க யாரும் தயா­ராக இருக்கவில்லை. இவ்­வா­றான ஒரு நிலை­ யில்  பாது­காப்பு தொடர்பில் அச்ச நிலை உரு­வா­கி­யது. இதுவே குண்­டுத்­தாக்­குதல் சம்­ப­வங்­க­ளுக்குப் பிர­தான கார­ணங்­க­ளாக அமைந்­தன. 

கேள்வி : அவ்­வா­றானால் தற்­போது நாட்டின் பாது­காப்பு நிலை­மைகள்  திருப்­தி­ய­டையக் கூடி­ய­தாக உள்­ளதா? 

பதில் : உயிர்த்த ஞாயிறு தினத் தாக்­கு­தல்கள் தொடர்­பான  முன்­ன­றி­வித்­தல்கள் கிடைத்­தி­ருந்த போதிலும் ஜனா­தி­பதி  உள்­ளிட்ட தரப்­பினர்  இது தொடர்பில்  எந்த நட­வ­டிக்­கையும் எடுக்கவில்லை. இவ்­வா­றா­ன­தொரு சந்­தர்ப்­பத்தில், பாது­காப்பு சபை தரப்­பி­னர் அனைவரும் பங்­கு­பற்­றி­யிருப்­பார்­க­ளானால் தீர்க்­க­மான கலந்­து­ரை­யா­டல்­களை முன்­னெ­டுத்து சிறந்த தீர்வை வழங்­கி­யி­ருக்க முடியும். ஆனால் அதற்­கான வாய்ப்­பு எதுவும் ஏற்­ப­டுத்திக் கொடுக்­கப்­படவில்லை. 

ஜனா­தி­பதி தரப்பின் குறை­பா­டு­களின் கார­ண­மாக இந்த தாக்­கு­தல்கள் இடம்­பெற்றுள்ளது. அதே சந்­தர்ப்­பத்தில் தாக்­கு­தல்கள் இடம்­பெற்று 24 மணி­நே­ரத்தில் பாது­காப்பு துறை­யி­னரால் நிலை­மையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரக்­கூ­டி­ய­தா­கவும் இருந்தது. தழி­ழீழ விடு­தலைப் புலி­களைப் போன்று இந்த பயங்­க­ர­வாத  தாக்­கு­தல்­களை மேற­்கொண்ட குழு­வி­ன ரைக் கருதி விடக்கூடாது. சர்­வ­தே­சத்தின் தேவை­க­ளுக்கு ஏற்­பவே இவர்கள் செயற்­பட்­டார்கள் என்­பதை மறந்துவிட முடி­யாது. 

தற்­போ­தைய அளவில் பாது­காப்பு பிரச்­சி­னைகள் எதுவும் இல்லை.  பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் அனைத்தும் பலப்­ப­டுத்­தப்­பட்டே உள்­ளன. ஆயினும் முஸ்லிம் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு சிங்­கள மக்­களை விட முஸ்லிம் மக்­களே கடும் எதிர்ப்பை வெளியிட்­டி­ருந்­தனர். இந்த தாக்­குதல் சம்­ப­வங்­களின் பின்­னரும் இது­­வரையில்  பாது­காப்பு தொடர்­பான பொறுப்­புக்கள் அர­சாங்­கத்­துக்கு ஒப்­ப­டைக்­கா­விட்­டாலும் தேசிய பாது­காப்பு சபைக் கூட்­டங்­களில் பிர­த­மரும் பாது­காப்பு ரா­ஜாங்க அமைச்­சரும் பங்­கு­பற்­று­கி­றார்கள். சில சந்­தர்ப்­பங்­களில் நாங்­களும் பங­கு­பற்­றுவோம்.  

தற்­போது கூடும் பாது­காப்பு சபை கூட்­டங்கள் முழு­மை­யா­ன­தாக இருந்­தாலும் இன்னும் தேசிய பாது­காப்பு தொடர்பில்  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சறி­சே­ன­வுக்கும் பிர­தமர் ரணில் விக்ர­ம­சிங்க உள்­ளிட்ட  எங்­களின் குழு­வி­ன­ருக்கும் இடையில் முரண்­பாடு நிலை­மையே காணப்­ப­டு­கி­றது. ஆயினும் ஜனா­தி­பதி எதிர்­கா­லத்தில் சட்ட ஒழுங்கு அமைச்சை அர­சாங்க­த்­திடம்  ஒப்­ப­டைத்து பாது­காப்பு விடயம் தொடர்பில் சகல பிரி­வி­ன­ரு­டனும் ஒற்­று­மை­யாக செயற்­ப­டுவார் என்ற எதிர்­பார்ப்பு எங்­க­ளுக்கு உள்­ளது. தற்­போ­தைய நிலை­மை­களில் சக­ல­ரு­டனும் இணைந்து பணியாற்றும் வகையில் படி­ப்ப­டி­யாக ஜனா­தி­ப­தியின் செயற்­பா­டுகள் மாறி­வ­ரு­ கி­ன்றன. ஆகையால் எதிர்­கா­லத்தில் பாது­காப்பு  தொடர்பில் எந்த பிரச்­சி­னையும் ஏற்­ப­டாது. 

கேள்வி : அதே­போன்று தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராகப் பல்­வேறு செயற்­ப­ாடுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றதே ? 

பதில்: இதற்கு முன்னர் நாட்டில் இவ்­வா­றான தாக்­கு­தல்கள் இடம்­பெற்ற ஒவ்­வொரு சந்­த­ர்ப்­பத்­திலும் ஓர் இனத்­துக்கு எதி­ராக செயற்­படும் நிலை உரு­வா­கி­யி­ருந்­தது. 1971 ஆம் ஆண்டு இடம்­பெற்ற தாக்­கு­தல்­களின் போதும் தமிழ், சிங்­கள மக்­க­ளுக்கு பார­தூ­ர­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. ஆனால்  அதற்கு எதி­ராக அர­சாங்­­கத்தால் கடும் சட்டநட­வ­டிக்­கைகள்  எடுக்­கப்­பட்­டன. இதே­போன்று 1983 களில் இடம்­பெற்ற கல­வ­ரங்­க­ளிலும் பாரிய உயிர்ச்சேதம் ஏற்­பட்­டி­ருந்­தது.  தாக்­கு­தல்கள் இடம்­பெறும் சந்­த­ர்ப்­பங்கள்  சந்­தேக­த்தின் அடிப்­ப­டையில் கைது நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­வது இயல்­பானதொரு விட­ய­ம். 

முப்­பது வருடகால யுத்­தத்தின் போதும் இதே­போன்ற நிலை தமிழ் மக்­க­ளுக்கு ஏற்­பட்­டது. இந்த யுத்த காலத்தில் தமிழ் மக்கள் அசௌ­க­ரிய நிலை­ மையை அடைந்­தி­ருந்­தனர். அவ்­வா­றான துர்ப்­பாக்­கிய நிலை­மையே இன்று முஸ்லிம் மக்­க­ளுக்கும் நேர்ந்­துள்­ளது. ஆனால் இந்த செயற்­பா­டு­களில்  முஸ்லிம் மக்­க­ளுக்கு உயிர்ச் சேதமோ அல்­லது அவர்­க­ளுக்கு எதி­ரான ஆள்­க­டத்தல் சம்­ப­வங்­களோ இடம்­பெ­ற­வில்லை. 

இருந்­தாலும்  அவர்­க­ளுக்கு  எதி­ரான செயற்­பா­டுகள் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. தற்­போ­தைய அளவில்  எதிர்ப்பு நட­வ­டிக்­கைகள் படிப்­ப­டி­யாக கட்­டுப்­பாட்­டுக்குள் வந்­துள்­ள­துடன் எதி­ர் ­கா­லத்தில் இந்த செயற்­பா­டுகள் கட்­டு­ப்பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­படும் என்று எதிர்­பார்க்­கிறேன். 

கேள்வி : தற்­போ­துள்ள அர­சியல் வேறு­பா­டு­களின் மத்­தியில் இந்த பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண­மு­டியும் எனக் கரு­து­கி­றீர்­களா? 

பதில் : அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக அர­சி­யல்­வா­தி­களே மக்கள் மத்­தியில் இன­வா­தத்தைத் தோற்றுவித்­தனர். மக்­கள் ஒரு­போதும் இன­வா­தத்தை உரு­வாக்க வில்லை. 1950 ஆம் ஆண்­டு­களில் இருந்து சகல இன மக்­களின் வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக இன­வாதம் என்ற விட­யத்தை அர­சி­யல்­வா­திகள் பக ைடக் ­கா­யாகப் பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர். இந்த இன­வாதம், மத­வாதம் கார­ண­மாகப் பாரதூ­ர­மான எதிர்­வி­ளை­வு­களும் ஏற்­பட்­டுள்­ளன. இதுதான் தற்­போ­தைய எமது நாட்டின் நிலை.    

கேள்வி: இந்த அர­சாங்­கத்தின் பதவிக்­காலம் நிறை­வ­டைய இன்னும் குறு­கிய காலமே உள்­ளது. இந்­நி­லையில் அரசாங்­கத்தின் எதிர்­கால நட­வ­டிக்­கைகள் எவ்­வா­றா­ன­தாக அமையப் போகி­றது? 

பதில் : எஞ்­சி­யி­ருக்கும் இந்த குறு­கிய காலத்­தில் சகல சகோ­தர அதி­கார சக்­தி­க­ளையும் இணைத்­துக்­கொண்டு அர­சாங்­கத்தை  மாற்றுப் பாதையில் இட்­டுச்­செல்ல முடியும் என்ற நம்­பிக்கை எனக்கு உள்­ளது. இன­வாதம் மத­வா­தத்தை எதிர்த்து உயிர்ப்­பான ஜன­நா­ய­கத்­தன்­மையை உரு­வாக்க கூடிய ஜன­நா­யக அதி­காரம்  உடைய கூட்­ட­ணியை உரு­வாக்க முடியும். அதற்­கான வாய்ப்­புக்­களும் உள்­ளன. இத­னூ­டாக எதிர்­வரும் தேர்­தல்­களில் சிறந்த வெற்­றி­ களைப் பெற்­றுக்­கொள்­ளவும் முடியும். இதனை மைய­மாகக் கொண்­டாலே தற்­போ­தைய அர­சாங்­கத்தின் இலக்­கு­களை அடைந்­து­கொள்ள முடியும்.  

மக்கள் அர­சாங்­கத்­துக்கு எதி­ராக முரண்­பட்­டாலும்  மகி்த ராஜ­பக்ஷ அணி­யி­ன­ருக்கு சார்­பாக செயற்­பட வில்லை. இதற்கு சிறந்த உதா­ர­ண­மாக  2018 ஒக்­டோபர்  26 ஆம் திகதி இடம்­பெற்ற அர­சியல் நெருக்­கடி நிலை­மையை எடுத்­துக்­கொள்­ளலாம். அர­சாங்­கத்தை எதிர்த்த அனை­வரும் ஜன­ நா­ய­கத்­துக்­காக எங்­க­ளுடன் கைகோர்த்­தார்கள். 

எங்­க­ளி­ட­மி­ருந்து பிரிந்து சென்று எங்­க­ளுக்கு எதி­ராகச் செயற்­பட்­டாலும் முழு­மை­யாக கொள்­கை­களில் இருந்து அவர்கள் மாறு­படவில்லை. எனவே எதி­ர­்கா­லத்தில் அர­சாங்­கத்தால் எடுக்­கப்­படும் ஜன­நா­யக ரீதி­யான செயற்­பா­டு­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­விக்கும்  தரப்­பி­ன­ரது ஆத­ரவைப் பெற்­றுக் ­கொள்ள முடியும்  என்ற எதிர்­பார்ப்பும் எனக்கு உள்­ளது. இதனை அடைந்­து­கொள்ள வேண்­டு­மானால் உறு­தி­யான தலை­மைத்­துவம் அவ­சியம். அதற்­கா­கவே ஐக்­கிய தேசிய முன்­ன­ணியை உரு­வாக்கும் முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கிறோம். 

கேள்வி: ஐக்­கிய தேசியக் கட்சி அமைக்­க­வுள்ள ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்கு முஸ்லிம் அமைச்­சர்­களின் ராஜி­னா­மா­வினால் சவால் ஏற்­பட்டால்...? 

பதில் : அவர்கள் அமைச்­சுக்­களில் இருந்து பதவி வில­கி­யி­ருந்­தாலும் அர­சாங்க­த்­தி­லி­ருந்து பதவி விலகவில்லை. அதே­போன்று  இந்த அர­சாங்­கத்­தி­லி­ருந்து விலகி எமக்கு எதி­ராக செயற்­பட மாட்­டார்கள். அந்த நம்­பிக்கை எமக்கு உள்­ளது.  மக்­களின் நன்மை  கரு­தியே அவர்கள் அமைச்சு பத­வி­களை துறந்­தனர். இதன் கார­ண­மா­கவே இவ்­வ­ளவு பிரச்­சி­னைகள் ஏற்­பட்டும்   அர­சாங்­கத்தில் இருந்து வெளியே­றாமல் உள்­ளனர்.

அவர்­களின் ஒற்­று­மையை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­காக அனைத்து முஸ்லிம் உறுப்­பி­னர்­களும் கைகோ­ர்த்­துள்­ளனர். இருப்­பினும் அவர்கள் எதி­ர­ணி­யுடன் கூட்­டணி அமைக்கவில்லை. 

கேள்வி : ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு ஆத­ர­வ­ளிக்க ஆரம்­பித்த நாள் முதல் சுகா­தார அமைச்­ச­ராக இந்த அர­சாங்­கத்­துக்கு பெரும் பங்­காற்றி வரு­கி­றீர்கள். ஆனால் அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்­தினர் உங்­க­ளுக்குக் கடும் எதிர்ப்பை வெளியி­டு­கின்­ற­னரே ? காரணம் என்ன ? 

பதில் : அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்­தினர் பொது­ஜன பெர­மு­னவின் ஆத­ர­வா­ளர்கள். பொது­ஜன பெர­மு­னவின் அர­சியல் நோக்­கங்­களை நிறை­வேற்­று­ப­வர்­க­ளா­கவே  அவர்கள் செயற்­ப­டு­கி­றார்கள். அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்தில் உள்ள வைத்­தி­யர்கள் அர­சியல் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­ப­வர்கள் அல்லர். இந்தச் சங்­கத்தில் இருக்கும் ஒரு குழு­வி­னரே இவ்­வாறு எனக்கு எதி­ராக செயற்­ப­டு­கின்­றனர். 

எனவே இந்த குழு­வினர் அர­சியல் நோக்­கங்­க­ளோடு மகிந்த அணி­யி­ன­ருடன் இணைந்தே செயற்­ப­டு­கின்­றனர். எனவே  இவர்­க­ளிடம் உள்ள ஒரே துருப்புச் சீட்டு நான்தான்.

கேள்வி : புற்­று­நோய்க்­கான மருந்து கொள்­வ­ன­வு­க­ளின்­போது நிதி மோசடி செய்யப்­பட்­டுள்­ள­தாக உங்கள் மீது குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கின்­றரே ? 

பதில் : மருந்­து­களை கொள்­வ­னவு செய் ­வது தொடர்­பிலும் அவற்றைக் கொள்­வ­னவு செய்ய­வென மருந்து ஒழுங்­கு ­ப­டுத்தல் அதி­கார சபை என்ற ஒன்று தனி­யாக இயங்கி வரு­கி­றது. இந்த அதி­கார சபையே மருந்து கொள்­வ­னவு தொடர்­பான அனைத்து தீர்­மா­னங்­க­ளையும் எடுக்­கி­றது. இந்தச் சபையில் நிபு­ணத்­து­வ­மு­டைய அதி­கா­ரி­களே பணி­பு­ரி­கி­றார்கள். எனவே அவர்கள் பரிந்­து­ரைக்கும் மருந்து வகை­க­ளையே கொள்­வ­னவு செய்ய முடியும். 

அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக பிழை­யான பிர­சா­ரங்­களின் கார­ண­மா­கவே இந்த பிரச்­சினை உரு­வா­கி­யுள்­ளது. இது­ கு­றித்து சுகா­ தார அமைச்சின் செய­லா­ளரும் தகுந்த விளக்­கங்­களை வழங்­கி­யுள்ளார். ஆனால் அவர் குறிப்­பிட்ட  விடயங்­க­ளையும் நிரா­க­ரித்து எதிர்ப்­பையே தெரி­விக்­கின்­றனர். இது தொடர்­பான தக­வல்­களை செய­லாளர் ஊட­கங்­க­ளுக்கும் அறி­வித்­துள்ளார்.  ஆனால் இந்த தக­வல்கள் சரி­யாக வெளியி­டப்­படவில்லை. எனவே இந்த விட­யத்தில்  சூழ்ச்சியே நிலவுகிறது.  

இவ்­வாறு மருந்­து­களைக் கொள்­வ­னவு செய்யும் நிறு­வ­னங்­களின் அதி­கா­ரிகள் அரச திணைக்­க­ளங்­களுடன் தொடர்பு இருப்­ப­தற்­கான வாய்ப்­புக்கள் உள்­ளன. இது  சாதாரண விடயமும் கிடை­யாது.  மருந்­து­களைக்  கொள்­வ­னவு செய்யும் தனியார் நிறு­வ­னங்கள் தமது நட்­டங்­களை ஈடு செய்­வ­தற்­காக பாரியளவில் செலவு செய்­கின்­றனர். இவ்­வாறு தனியார் நிறு­வ­ன­ங்­களின் செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக அரச தலை­யீ­டுகள் ஏற்­படும் போது பாரிய குற்­றச்­சாட்டுக்கள் இடம்­பெ­று­வ­தற்­கான வாய்ப்­புக்கள் உள்­ளன. 

அவ்­வா­றான தனியார் நிறு­வ­னங்­களும் வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கமும் ஒரு­மித்தே செயற்­ப­டு­கின்­றன. இவ்­வா­றான குற்­ற­சாட்­டுக்கள் தொடர்பில் இந்த தனியார் நிறு­வ­னங்­க­ளிடம் கேள்வி எழுப்பும் போது அவற்றை நிரூ­பிப்­ப­தற்­கான சான்­றுகள் எதுவும் இருப்­ப­தில்லை. புற்­றுநோய் மருந்­துகள் தொடர்பில் குற்­றச்­சாட்­டுக்கள் இவர்கள் முன்­வைத்தும் நோயா­ளர்கள் இது குறித்து எந்த  முறைப்­பாடும் செய்­த­தில்லை. 

கேள்வி: அதே­போன்று நெவில் பெர்­னாண்டோ வைத்­தி­ய­சாலை இன்னும் அர­சுக்கு சொந்­த­மாக்க­ப­்படவில்லை என்றும் குறிப்­பி­டப்­ப­டு­கி­றதே ? 

பதில் : இந்த வைத்­தி­ய­சா­லையை அரசின் கட்­டுப்பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரு­வ­தற்­கான அமைச்­ச­ரவை உள்­ளிட்ட சகல தரப்­பி­ன­ரதும் ஒத்­து­ழைப்பும் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. அதன் நிர்­வாகம் அனைத்தும் சுகா­தார அமைச்சின் கீழே செயற்­ப­டு­கி­றது. அதன் உறுப்­பி­னர்­க­ளையும் சுகா­தார அமைச்சே தீர்­மா­னிக்­கி­றது. இவ்­வாறு இருக்கும் போது நெவில் பெர்னாண்டோ வைத்­திய சாலையை தனியார் வைத்­திய சாலை­யென்று கூற­மு­டி­யாது.  

கேள்வி: அதே­போன்று உங்­க­ளுக்கு எதி­ராக நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்­டங்கள் இடம்­பெ­றுகி­ன்றனவே? 

பதில் : இவ்­வா­றான எதிர்ப்பு செயற் ­பா­டு­களே இன­வா­தத்தை உரு­வாக்­கு கின்றன.  இதற்கு முன்­னரும் எனக்கு எதி­ ராக இவ்­வா­றான எதி­ர்ப்பு போராட்­டங்கள் இடம்­பெற்­றுள்­ளன. தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் காலத்­திலும்  எனக்கு எதி­ரான செயற்­பா­டுகள் இடம்­பெற்­றன. ஆனால்  அவற்றால் என்னைத் தோற்­கடிக்க முடி­ய­வில்லை. இவ்­வா­றான எதிர்ப்­புக்கள் குறு­கிய காலத்­துக்கே நீடிக்கும். 

கேள்வி : தமிழ் அர­சியல் கட்­சிகள் அர­சாங்­கத்­து­ட­னான தொடர்­பு­களில்  ஏதும் பிளவுகள் உள்ளனவா? ஒத்துழைப்பு வழங்கு கிறார்களா? 

பதில் : தமிழ் அரசியல் கட்சிகள் அரசாங் கத்துக்குச் சிறந்த ஒத்துழைப்பையே வழங்குகின்றனர். இதற்கு முன்னர் இருந்ததைவிட அதிக பங்களிப்பை வழங்குகிறார்கள். 

கேள்வி : எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு ஐக்கிய தேசிய கட்சி தயாராகி விட்டதா? 

பதில் : நிச்சயமாக! ஜனாதிபதி தேர்தலுக்கு நாங்கள் தயார். இந்த தேர்தல்  பொதுஜன பெரமுனவுக்கு பாரிய சவாலாகவே அமையும். மகிந்த தரப்பு மீதான மக்களின் ஆதரவும் குறைந்துள்ளது. இன்று அவர்களுக்கு  ராஜபக்ஷ குடும்பத்தை அன்றி வேறு எவரையும் வேட்பாளராகத் தெரிவு செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. இதன்காரணமாக எதிர்த்தரப்புக்குள் முரண்பாடுகள் காணப்படுகின்றன. எனவே இன்னும் மூன்று மாதங்களாகும் போது  அரசியல்  நிலைமைகளில் பாரிய மாற்றம் ஏற்படக்கூடும். 

கேள்வி : அவ்வாறாயின் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் தயாரா? 

பதில் : எங்களின் வேட்பாளர் பட்டியலில் பலர் உள்ளனர். உரிய நேரத்தில்  அவர்க ளில் ஒருவரைத் தெரிவு செய்வோம். ஆனால் எங்களால் களமிறக்கப்படும் வேட்பாளர்  குடும்பத்தைச் சார்ந்தவராக இருக்க மாட்டார். பொதுஜன முன்னணி இன்னும் மன்னராட்சி காலத்தில் உள்ளது. குடும்பத்தைத் தவிர வேறு எவருக்கும் இடம் கிடைப்பதில்லை. 

கேள்வி: அமைச்சர் அஜித் பி.பெரேரா, அமைச்சர் சஜித் பிரேமதாசவே ஜனாதிபதி வேட்பாளர் என கூறியுள்ளாரே ? 

பதில் : ஆம், அவரும் ஐக்கிய தேசிய கட்சியின் பரிசீலனையிலுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவர். 

கேள்வி : ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரோ அல்லது தேர்தல்களின் பின்னரோ அரசியல் நிலைமைகளில் எவ்வாறான மாற்றம் ஏற்படும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? 

பதில்: மகிந்த ராஜபக் ஷவுக்கு எதிராக ஜனநாயக முன்னணியொன்றை உருவாக் குவோம். தேர்தலுக்கு பின்னர் ஒரு கொள்கையின் அடிப்படையிலான ஒற்று மையான அரசாங்கமே ஏற்படுத்தப்படும்.  

நா.தினுஷா