ஐக்கிய தேசிய கட்சியின் மேதினக் கூட்டம்  கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.   

மாளிகாவத்தை பி.டி. சிறிசேன மைதானத்திலிருந்து ஆரம்பித்த ஐக்கிய தேசிய கட்சியின் ஊர்வலம்  மருதானை புஞ்சி பொரளை, பொரளை ஊடாக  கெம்பல் பார்க் மைதானத்தை வந்தடைந்தது. 

புஞ்சி பொரளையில் அமைக்கப்பட்டிருந்த மேடையொன்றில்  நின்றிருந்த  பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான  ரணில் விக்ரமசிங்க  ஊர்வலத்தில் வந்த மக்களை  வரவேற்றுக்கொண்டிருந்தார்.  

அத்துடன் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன தலைமையிலான ஜனநாயக அமைப்பு   ஹைட்பார்க் மைதானத்தில் கம்பல் பார்க் மைதானத்தை வந்தடைந்தது.   

மேலும்  பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தலைமையிலான தொழிலாளர் தேசிய காங்கிரஸ்  காலி முகத்திடலிலிருந்து  ஊர்வலமாக கம்பல் பார்க் மைதானத்தை வந்தடைந்தது. 

 வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து  பகுதிகளிலிருந்தும்  ஐக்கிய தேசிய கட்சியின் மேதினக் கூட்டத்தில்  பெருந்திரளான  மக்கள்  கலந்துகொண்டிருந்தனர்.  

ஊர்வலத்தில்  பாராளுமன்ற உறுப்பினர்களான  கபிர் ஹஷீம் சுஜீவ சேனசிங்க ஹரீன் பெர்னாண்டோ  ரஞ்சித் மத்தும பண்டார எரான் விக்ரமரட்ன  அஜித் பி. பெரெரா  உள்ளிட்டோர் வருகை தந்தனர். 

"நாங்கள் போகும் பயணம் நாட்டை பாதுகாக்க அவர்கள் போகும் பயணம்  அவர்களின் நன்மைக்காக"  ""தொழிலாளர் துயர் துடைக்கும் அரசாங்கம்   மக்களை  ஏமாற்றி குடும்ப ஆட்சியை நடத்தியவர்கள் ஒழிக""     "" இது ரணில் இருக்கும் ௪ஜித் இருக்கும் அசராங்கம் யாரும்  அசைக்க முடியாது"" போன்ற  கோஷங்களை எழுப்பிய வண்ணம் ஐககிய தேசிய கட்சி ஆதரவாளர்கள்  ஊர்வலத்தில் கலற்துகொண்டனர். 

அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் ௪ஜித் பிரேமதாச ஆகியோரின் உருவப்படங்கள் அடங்கிய  பதாதைகளும்  தோரணைகளும் அமைக்கப்பட்டு  ஊர்வலமாக   எடுத்துச் செல்லப்பட்டன.   

ஒவ்வொரு துறைசார்  பிரிவினரும்  தமது  தொழிற்துறை  குறித்த கண்காட்சிகளை  ஐக்கிய  தேசியக் கட்சியின் ஊர்வலத்தில்     அரங்கேற்றியிருந்தனர்.  

இன்று மாலை நான்கு மணியளவில்   ஐக்கிய தேசிய கட்சியின் மேதினக் கூட்டம்  கம்பல் பார்க் மைதானத்தில்  ஆரம்பமாகியதுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பல தலைவர்கள்  உரையாற்றினர்.    

மேதினக் கூட்டத்தில்  இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன்  சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்  ரவூப் ஹக்கீம்   உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.