உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர்களில் முக்கியமானவர் என கருதப்படும் அகமட் மில்கான் ஹயாத்து முகமட் மத்தியகிழக்கு நாடொன்றில் கைதுசெய்யபடுவதற்கு இன்டர்போலின் சிகப்பு எச்சரிக்கையே காரணமாகயிருந்தது என அந்தஅமைப்பின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் கைதுசெய்யப்படுவதற்கு சர்வதேச பொலிஸாரின் நடவடிக்கையே காரணம் என இன்டர்போலின் செயலாளர் நாயகம் யுர்ஜென் ஸ்டொக் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து இன்டர்போல் உடனடியாக வெளியிட்ட சிகப்பு எச்சரிக்கை காரணமாகவே இவர்களை மத்திய கிழக்கு நாடுகளில் கைதுசெய்ய முடிந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளிற்கு உதவுவதற்காக இன்டர்போல் இந்த சிகப்பு எச்சரிக்கையை விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டிருப்பது விசாரணைக்குமிகவும் முக்கியமான விடயம் என தெரிவித்துள்ள  இன்டர்போலின் செயலாளர் நாயகம் யுர்ஜென் ஸ்டொக்  இதற்கு உதவியதற்காக இன்டர்போல் பெருமைப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச குற்றவாளிகளை கைதுசெய்து நீதியின் முன் நிறுத்தும் நடவடிக்கைகளி;ல் எங்கள் உறுப்பு நாடுகள் ஒத்துழைப்பு வழங்க செய்வதற்கு சிகப்பு எச்சரிக்கை ஒரு  முக்கியமான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து இன்டர்போலை சேர்ந்தவர்கள் இலங்கைக்கு உடனடியாக அனுப்பபட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்