கப்பல்துறை பகுதியில் இரு குழுக்கிடையில் நடந்ததாக கருதப்படும் மோதல் காரணமா ஒருவீடு சேதமடைந்துள்ளதாக சீனக்குடா பொலிசார் தெரிவித்தனர்.

திருகோணமலை - அனுராதபுரம் சந்தியில் இரு தினங்களுக்கு முன்னர் நடந்ததாகக்கருதப்படும் கத்திக்குத்து சம்பவத்தின் எதிரொலியாகவே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களென சந்தேகிக்கப்படும்15 பேரை பொலிசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.