எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலிற்கு முன்னர் என்ன நடந்தது?- புதிய தகவல்

Published By: Rajeeban

15 Jun, 2019 | 11:08 AM
image

ஓமான் வளைகுடாவில் எண்ணெய்கப்பல்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்கு முன்னர் ஈரான் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் மீது  ஏவுகணைதாக்குதல்களை மேற்கொண்டது என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

ஓமான்வளைகுடாவில் அமெரிக்காவின் ஆளில்லாவிமானங்கள் காணப்படுவதை  அவதானித்த ஈரானின் பாதுகாப்பு படையினர் அமெரிக்க விமானம் மீது ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டனர் என அமெரிக்க அதிகாரியொருவர் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த ஏவுகணை இலக்கை தாக்க தவறியது  என தெரிவித்துள்ள அந்த அதிகாரி ஏவுகணை கடலில் விழுந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்வதற்கு முன்னர் அமெரிக்காவின் எம்கியு-9 ரீப்பர் ரக விமானங்கள் ஈரானிய கடற்படை கலங்கள் எண்ணெய்க்கப்பல்களை நோக்கி செல்வதை அவதானித்தன எனவும் தெரிவித்துள்ள அதிகாரி எனினும் எண்ணெய்க்கப்பல் மீது தாக்குதல் இடம்பெறுவதை ஆளில்லா விமானங்கள் அவதானித்தனவா என்பது குறித்து தகவல் எதனையும் வெளியிட மறுத்துள்ளார்.

இதேவேளை சில நாட்களிற்கு முன்னர் ஹெளத்தி கிளர்ச்சிக்காரர்கள் ஈரானின் ஏவுகணைகளை பயன்படுத்தி செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லா விமானமொன்றை சுட்டு வீழ்த்தினார்கள் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47