ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தஜிகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பிஷ்சேக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு இடம்பெற்றுவருகின்றது. இதில் பங்கேற்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட குழுவினர் அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோமலி ரஹ்மான் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (15) துஷான்பே ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இதன்போது இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் குறித்து பேசப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.