ஓமான் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலிற்கு ஈரானே காரணம் என அமெரிக்க குற்றம்சாட்டியுள்ளதை அந்த நாடு நிராகரித்துள்ளது.

இந்த துரதிஸ்டவசமான சந்தேகத்திற்கு இடமான  சம்பவத்திற்கு ஈரான் மீது குற்றச்சாட்டுவதே அமெரிக்காவிற்கு இலகுவான வழி என ஈரானின் வெளிவிவகார அமைச்சரக பேச்சாளர் அபாஸ் மௌஸ்வி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் அச்சமளிக்கின்றனஎனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட கடல்பரப்பின் பாதுகாப்பிற்கு நாங்களே பொறுப்பு என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் பாதிக்கப்பட்ட கப்பலின் மாலுமிகளை நாங்கள் உடனடியாக மீட்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

 ஓமன் வளைகுடாவில் நேற்று தாக்கப்பட்ட  எண்ணெய் கப்பலில் இருந்து வெடிக்காத கண்ணிவெடியை  ஈரானிய கடற்படையினர் அகற்றுவதை காண்பிக்கும் வீடியோவை அமெரி;க்கா வெளியிட்டுள்ளது.

ஜப்பானிற்கு சொந்தமான எணணெய் கப்பலிற்கு அருகில் சிறிய படகொன்று செல்வதையும் அந்த படகிலிருந்து நபர் ஒருவர் ஏறி பொருளொன்றை அகற்றுவதையும் வீடியோ காண்பித்துள்ளது.

வெடிக்காத கண்ணிவெடியையே குறிப்பிட்ட நபர் அகற்றுகின்றார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

குறிப்பிட் பகுதியில் காணப்பட்ட அமெரிக்காவின் படைவிமானமொன்று இதனை பதிவு செய்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்