கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைத் குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பில் கைதான 102 பேர் தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

குறித்த தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தில் சுமார் 250 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 300 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர்.

இதையடுத்து தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பில் நாடளவிய ரீதியில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின் போது கைதுசெய்யப்பட்ட 102 பேர் மீது தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் குறித்த 102 பேரில் 77 பேரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தடுத்த வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மிகுதி 25 பேரை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.