எம்முடைய உடலில் எங்கேனும் அடிபட்டால், அதற்கு சிகிச்சையளிக்காவிட்டாலும் அவை நாளடைவில் சரியாகிவிடும். ஏனெனில் தோலில் சிறிய அளவில் சிராய்ப்பு மட்டுமே ஏற்பட்டிருக்கும். அங்கு தோலின் வளர்ச்சி இயல்பான முறையில் நடைபெற்று சீராகிவிடும்.
சிலருக்கு அடிப்பட்ட இடத்தில் தோலின் வளர்ச்சி அதிகமாகி, அது ஒரு கட்டி போல் உருவானால், அதற்கு கீலாய்ட் என்று வைத்திய மொழியில் பெயர். உடலிலுள்ள ஒரு என்சைம் உற்பத்தி குறைவதால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. சிலருக்கு இது பாரம்பரியமாகவும் வரக்கூடும். கீலாய்ட் கட்டிகளை உடனடியாக சத்திர சிகிச்சையின் மூலம் அகற்றினாலும் மீண்டும் அவை வரக்கூடும்.
ஆனால் இதற்கு தற்போது 15 நாளுக்கு ஒரு முறை ஸ்டீராய்ட் மருந்துகளை எடுத்துக் கொண்டால் இதன் வளர்ச்சியை தடுத்து நிவாரணம் பெறலாம். இத்தகைய நிவாரணத்தை தொடர்ந்து ஐந்து அல்லது ஆறுமுறை இத்தகைய ஸ்டீராய்ட் மருந்துகளை எடுத்துக் கொண்ட பிறகு கட்டியின் வளர்ச்சி, முழுமையாக தடுக்கப்பட்டு அவை குறையத் தொடங்கும். அதன்பிறகு அங்கு கிரையோ எனப்படும் சத்திரசிகிச்சை செய்து கொள்ளவேண்டும்.
இதன்போது மைனஸ் 196 டிகிரி குளிரூட்டப்பட்ட ஒரு திரவத்தை அதன் மீது செலுத்தி விடுவார்கள். ஏனெனில் மைனஸ் எண்பது டிகிரியில் , தோலுக்கும் அடியிலுள்ள ஒரு அணுவின் காரணமாக தான் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. அதனை செயற்படவிடாமல் தடுத்துவிட்டால்,அதன் பிறகு தோலின் வளர்ச்சி புதிதாக நடைபெறாது. இத்தகைய சிகிச்சையை மூன்று மாதம் தொடர்ந்தால் கீலாய்ட் கட்டி புதிதாக தோன்றாது. அத்துடன் தோலும் இயல்பாகிவிடும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM