ரஜினிகாந்த் ‘பேட்ட’ படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.

பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபார், தலிப் தாஹில், யோகிபாபு, மனோபாலா, ஹரிஷ் உத்தமன், ஆனந்தராஜ், சுமன், ஸ்ரீமன் உள்பட மேலும் பலர் நடிக்கிறார்கள்.

இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் மும்பையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த் மும்பை தாதாக்களை அழிக்கும் பொலிஸ் அதிகாரியாக வருகிறார். 

ரஜினியின் வயதான இன்னொரு தோற்றமும் படத்தில் உள்ளது என்றும், அவருக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிப்பதாகவும் கூறப்படு கிறது. பொலிஸ் அதிகாரியாக வரும் ரஜினியின் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படப்பிடிப்பு காட்சிகள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க படப்பிடிப்பு தளத்துக்குள் தொலைபேசி கொண்டு செல்ல தடை விதித்துள்ளனர். 

இந்த நிலையில் தர்பார் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் இன்னும் 2 வாரத்தில் வசன காட்சிகளின் படப்பிடிப்பு முடிய இருப்பதாகவும் தகவல் வெளியானது. 

எனினும் இதனை ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்துள்ளார். இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட அவர், ஒகஸ்டம் மாதம் வரை தர்பார் படப்பிடிப்பு நடைபெறும் எனவும், இந்த படத்தின் ஒரு பாடல் காட்சிக்காக ரஜினிகாந்தும், நயன்தாராவும் சுவிட்சர்லாந்து செல்ல இருக்கிறார்கள். தர்பார் படம் ஜனவரி மாதம் பொங்கலுக்கு திரைக்கு வரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.