அத்­தி­யா­வ­சிய தேவை­க­ளான உணவு, உடை மற்றும் உறையுள் ஆகி­ய­வற்­றினை தங்­கு­த­டை­யின்றி வாழ்­நாள்­மு­ழு­வதும் எவ­ரொ­ருவர் பெறு­கின்­றாரோ அவர் நிச்­ச­ய­மாக மிகுந்த பாக்­கி­ய­சா­ளி­யாவார். சில­ருக்கு எல்லாம் அமைந்­து­வி­டு­வ­தனை நாம் பார்த்­தி­ருக்­கின்றோம். உண்­மை­யி­லேயே அவர்கள் கொடுத்து வைத்­த­வர்­கள்தான். சிலரோ வாழ்க்­கையின் ஆரம்­பத்தில் மிகவும் ஏழ்­மை­யா­கவும் பின்பு மிகுந்த செல்­வந்­த­ரா­கவும் வாழ்­வதைப் பார்த்­தி­ருக்­கின்றோம். வேறு­சிலர் வச­தி­யுடன் இருந்து பிற்­கா­லத்தில் வாழ்க்­கையில் ஒரு­வேளை உண­விற்­காகக் கஷ்­டப்­பட்டுத் துன்­பப்­படு­வ­தையும் நாம் பார்த்­தி­ருப்போம். இதற்கு மிக­முக்­கிய கார­ண­மாக அமை­வது திட்­ட­மில்­லாத மற்றும் வரு­மா­னத்­துக்கு அதி­க­மான செலவு. இந்த நிலை­மை­யினால் எதிர்­காலத் தேவைக்­கான சேமிப்பு இல்­லா­மலோ அல்­லது சிறந்த சேமிப்பு முறை­யினை அமைக்க முடி­யாமல் போகின்­றது. பெரிதோ, சிறிதோ சேமிப்பு மிகவும் முக்­கி­ய­மா­னதே.   மனித பண்­பு­களில் சேமிப்பு மிகவும் ஒரு சிறந்த பண்­பா­கவும் பழக்­க­மா­கவும் கரு­தப்­ப­டு­கின்­றது.

நம்­ அ­னை­வருக்கும் தெரிந்த ஒரு சேமிப்பு முறை பணத்­தினை வங்­கியில் நிலை­யான வைப்­பாக வைத்து அதி­லி­ருந்து வரு­ட­மா­கவோ அல்­லது மாத­மா­கவோ வட்­டி­யினை வரு­மா­ன­மாகப் பெற்று வாழ்க்கை முறை­யினை அமைத்து வைத்­த­லாகும். உண்­மை­யி­லேயே இம்­முறை ஒரு சிறந்த பிரச்­சி­னை­யற்ற (Less Risk Investment)  குறைந்­த­ள­வி­லான தாக்கம் கொண்ட தெரி­வாக அமையும். ஆனால் மனி­த­னாகப் பிறந்­தவன் காலத்­திற்­கேற்ப மாறு­கின்றான் என்­ப­தனைப் புதிய முறை­களில் அதிக ஆர்வம் காட்­டு­வதன் மூலம் எம்மால் காணக்­கூ­டி­ய­தாக இரு­கின்­றது. இந்த வகை­யினில் அவரின் சேமிப்பு முறை­யி­னிலும் கடந்த காலங்­களில் காணக்­கூ­டிய ஒன்றே பங்குச் சந்தை முத­லீ­டாகும். இன்­றைய திக­தியில் உலகப் பொரு­ளா­தாரம் பங்­குச்­சந்­தையைப் பெரும்­பாலும் சார்ந்­துள்­ளது என்றால் அது மிகை­யன்று. எனவே பங்குச் சந்­தையைப் பற்றி நாம் அறிந்­து­கொள்­வது இன்­றி­ய­மை­யா­த­தா­கின்­றது. 

எனவே எனது இந்த ஆக்­கத்தில் பின்­வரும் தலைப்­பின்கீழ் அதற்­கான விளக்­கத்­தினைத் தரு­கின்றேன். 

பங்கு (Share) என்றால் என்ன ?

வரை­ய­றுக்­கப்­பட்ட பொதுக்­கம்­பனி தாம் அனு­ம­தித்த மூல­த­னத்­தினை குறித்த அல­கினால் (Shares) வகுத்து பெறப்­ப­டு­வது பங்கு எனப்­படும். மற்றும் வரை­ய­றுக்­கப்­பட்ட கம்­ப­னி­யொன்றின் உரி­மையை சிறிய அல­கு­க­ளாகப் பிரிக்கும் போது ஒரு அலகின் பெறு­ம­தியும் பங்கு எனக் கரு­தப்­படும்.

பங்குச்சந்தை (Share Market) என்றால் என்ன ?

பொருட்­களை வாங்­கவும் விற்­கவும் பலரும் கூடு­மிடம் சந்தை எனப்­ப­டு­வது போல, பங்­கு­களை (Shares)  வாங்­கவும் விற்­கவும் கூடிய இடமே பங்­குச்­சந்தை எனப்­படும். பங்­குச்­சந்­தைக்கு ஒரு குறிப்­பிட்ட இருப்­பிடம் தேவை­யில்லை. கணினி மூல­மா­கவும், முக­வர்கள் (Brokers) மூல­மா­கவும் பங்­கு­களை வாங்­கவோ விற்­கவோ முடியும். குறிப்­பிட்ட சில நீண்ட கால கரு­விகள் (பங்கு பத்­தி­ரங்கள் / தொகுத்­திக்­கடன் பத்­தி­ரங்கள்) பரி­மாற்­றப்­படும் சந்தை பங்­குச்­சந்தை எனப்­படும். அதா­வது  பட்­டி­யற்­ப­டுத்­தப்­பட்ட கம்­ப­னி­க­ளினால் (Listed Company) விநி­யோ­கிக்­கப்­படும் பங்­குகள் மற்றும் தொகு­திக்­க­டன்கள் போன்ற பிணைப்­பத்­தி­ரங்­களைக் கொள்­வ­னவு, விற்­பனை இடம்­பெறும் சந்­தையே பங்குச் சந்தை ஆகும். மேலும் கொள்­வ­னவு செய்த பங்­கு­களை தமக்கு தேவைப்­படும் சந்­தர்ப்­பத்தில் வேறொ­ரு­வ­ருக்கு விற்­பனை செய்­வ­தற்கு உரு­வாக்­கப்­பட்­டுள்ள சந்தை பங்­குச்­சந்தை எனப்­படும். இலங்­கையில் பங்­குச்­சந்தை கொடுக்கல் வாங்­கல்­களை ஏற்­ப­டுத்­து­வது (CSE- – Colombo Stock Exchange) கொழும்பு பங்கு பரி­மாற்று  நிறு­வ­னத்தின் மூல­மே­யாகும்.

பங்குச் சந்தை முத­லீடு என்றால் என்ன ?

ஒவ்­வொ­ரு­வரும் தனது கையி­லுள்ள பணத்­திற்கு சம­னான வரை­ய­றுக்­கப்­பட்ட கம்­ப­னி­களின் பங்­கு­க­ளினை (Listed Shares) கொழும்பு பங்கு பரி­வர்த்­தனை நிலை­யத்தின் ஊடாக கொள்­வ­னவு செய்ய பயன்­ப­டுத்தும் பெறு­மதி பங்கு முத­லீடு எனப்­படும்.

எவ்­வ­கை­யான பங்­குளில் முத­லீடு செய்ய முடியும்.

சாதா­ரண பங்­குகள்  - ORDINARY SHARES

முன்­னு­ரிமைப் பங்­குகள் - PREFERENCE SHARES

பங்கு ஆணைப்­பத்­தி­ரங்கள் - SHARE WARRANTS

கூட்­டி­ணைக்­கப்­பட்ட தொகுத்­திக்­க­டன்கள் - COORPORATE DEBENTURES

எவ்­வாறு பங்­கு­களைக் கொள்­வ­னவு  செய்ய முடியும் (Share Purchases).

பங்­கு­களை வாங்­குதல் மற்றும் அதற்கு நிதி­ய­ளித்­த­லுக்கு பல்­வேறு முறைகள் உள்­ளன. மிகப் பொது­வான வழி­முறை பங்­குத்­த­ரகர் (Share Broker) மூலம் நடை­பெறும் முறை­யாகும். அவர்கள் முழு­நேர சேவை அளிப்­ப­வர்­களோ அல்­லது தள்­ளு­படி செய்யும் விற்­ப­னை­யா­ள­ராக விற்­ப­னை­யா­ள­ரி­ட­மி­ருந்து வாங்­கு­வோர்க்கு பங்கு மாற்­றத்தை ஏற்­பாடு செய்து தரு­கின்­ற­வர்­க­ளா­கவோ இருப்பர். பெரும்­பா­லான விற்­ப­னைகள் உண்­மையில் பங்குச் சந்­தையில் பட்­டி­ய­லி­டப்­பட்ட தர­கர்கள் மூலமே நடை­பெ­று­கின்­றன.

கம்­ப­னி­களால் வெளி­யி­டப்­படும் பங்­கு­களை வாங்­குதல் பணத்தை முத­லீடு செய்­யக்­கூ­டிய மற்­று­மொரு முறைசார் முத­லீட்டு வழி­மு­றை­யாகும். பங்­குச்­சந்­தையின் மூலம் பங்­கு­களைக் கொள்­வ­னவு செய்ய முடியும். அதா­வது வரை­ய­றுக்­கப்­பட்ட கம்­ப­னிகள் பங்­கு­களை வெளி­யி­டும்­போதோ (IPO- Initial Public Offering) அல்­லது பங்­கு­களை வைத்­துள்ள பங்­கு­த­ாரர்கள் அவற்றை மீள­விற்­கும்­போதோ பங்­கு­களை (Listed Shares) வாங்­கலாம்.

பல் வேறு­பட்ட பங்குத் தர­கர்கள் (Share Brokers) உள்­ளனர். அவர்­க­ளி­லி­ருந்து முழு நேர சேவை­ய­ளிக்கும் தர­கர்கள் அல்­லது தள்­ளு­படித் தர­கர்கள் போன்­ற­வர்­களில் எவரைத் தேர்வு செய்­வது? முழு நேர சேவைத் தர­கர்கள் வழக்­க­மாக ஒவ்­வொரு வர்த்­த­கத்­திற்கும் அதி­க­மாக கட்­டணம் விதிப்பர், ஆனால் முத­லீட்டு ஆலோ­சனை அல்­லது அதிக தனிப்­பட்ட சேவையை அளிக்­கின்­றனர். தள்­ளு­படித் தர­கர்கள் குறை­வான முத­லீட்டு ஆலோ­ச­னையை அளிக்­கின்றனர் ஆனால் வர்த்­த­கத்­திற்குக் குறை­வான கட்­டணம் விதிக்­கின்­றனர். மற்­றொரு தர­கர்­வகை வங்கி அல்­லது கடன் சங்­க­மாக இருக்­கலாம். அதில் முழு சேவைத் தர­க­ருடன் அல்­லது தள்­ளு­படித் தர­க­ருடன் ஒப்­பந்த ஏற்­பாட்டைக் கொண்­டி­ருக்­கலாம்.

தரகர் மூல­மாக (Share Broker)  வாங்­கு­வதைத் தவிர பங்­கினை வாங்க பல இதர வழிகள் உள்­ளன. அதில் ஒரு வழி நிறு­வ­னத்தின் மூலம் நேர­டி­யாக வாங்­கு­வ­தாகும். குறைந்­தது ஒரே­யொரு பங்கு சொந்­த­மாக கைவசம் இருந்­தாலும், பெரும்­பா­லான நிறு­வ­னங்கள் அவர்­களின் முத­லீட்­டா­ளர்கள் தொடர்புத் துறையின் மூல­மாக பங்­கு­களை நேர­டி­யாக வாங்­கிச்­செய்ய அனு­ம­திக்­கலாம்.  இருப்­பினும், நிறு­வ­னத்தின் துவக்­கப்­பங்கு ஒதுக்­கீடு ஒரு வழக்­க­மான பங்­கு­த­ரகர் மூல­மாகப் பெறச் செய்­யப்­பட வேண்டும். நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்து பங்­கினை வாங்கும் மற்­றொரு வழி நேரடி பொது அளிப்பு (Direct Public Offerings) ஆகும். அவை வழக்­க­மாக நிறு­வ­னத்­தி­னா­லேயே (Initial Public Offering) விற்­கப்­ப­டு­கி­றது. ஒரு நேர­டி­யான பொது அளிப்பு என்­பது துவக்­கப்­பொது அளிப்­பாகும். இதில் பங்­கினைத் தர­கர்­களின் உத­வி­யின்றி நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து நேர­டி­யாக வாங்­கலாம்.

எவ்­வாறு விற்­பனை செய்ய முடியும் ? (Share Disposal) எப்­பொ­ழுது விற்­பனை செய்ய வேண்டும்?

பங்­கினை விற்­பனை செய்­வ­தென்­பது வழி­மு­றை­ரீ­தி­யாகப் பங்­கினை வாங்­கு­வ­தற்கு ஒப்­பா­னது. பொது­வாக, முத­லீட்­டா­ளர்கள் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்க விரும்­புவார், அம்­மு­றையில் இல்­லா­விட்டால் குறு­கிய கால விற்­ப­னையைக் கொண்­டி­ருக்கும். இருந்­தாலும் எண்­ணற்ற கார­ணங்கள் ஒரு முத­லீட்­டா­ளரை அவ்­வாறு விற்கத் தூண்­டலாம். ஒரு பங்கின் விற்­ப­னையில் தர­கரின் முயற்­சிக்­கான கட்­டணம் விதிக்­கப்­ப­டு­கி­றது. இது விற்­ப­வ­ரி­ட­மி­ருந்து வாங்­கு­ப­வ­ருக்கு மாற்றம் செய்து கொடுக்கும் ஏற்­பாட்­டிற்­காக விதிக்­கப்­ப­டு­கி­றது (Share Broker Fee). இக்­கட்­ட­ண­மா­னது அதி­க­மா­கவோ அல்­லது குறை­வா­கவோ இருப்­பது என்­பது எந்த வகை­யான தரகுக் கொள்­வ­னவு மற்றும் விற்­ப­னைக்கு   இடைப்­பட்ட கால எல்­லை­யைக்­கொண்­டது (within one Day or more than one day), முழு நேர சேவையா அல்­லது எந்த தள்­ளு­படி விற்­பனைப் பரி­மாற்­றத்தைக் கையா­ளு­கி­றது போன்ற பல­வற்றைச் சார்ந்­தது. பரி­மாற்றம் செய்­யப்­பட்ட பிறகு விற்­ப­னை­யா­ள­ருக்கு அனைத்துப் பணமும் அதன் பிறகு உரி­மை­யு­டை­ய­தா­கின்­றது. 

எவ்­வ­கை­யான வரு­மா­னங்­க­ளினைப் பெற­மு­டியும்.

மூல­தன இலாபம் (Capital Gain), பங்­கு­லாபம்  (Dividend), Bonus Share, Right Options, & others non cash benefits.  

எப்­போதும் நிரந்­தர வரு­மானம் கிடைக்­குமா ?

வர்த்­தக வங்­கி­களின் வைப்­பு­களைப் போன்று (Fixed Deposit, Saving Deposits etc.) ஒரு நிலை­யான / நிரந்­தர வரு­மா­னத்­தினைப் பங்­குச்­சந்தை வியா­ப­ரத்தில் எதிர்­பார்க்க முடி­யாது. ஆனால் அதற்கு மாறாக அதிக வரு­மா­னத்­தினைப் பெறக்­கூ­டிய வாய்ப்­புகள் அதி­க­மாகக் காணப்­படும். இத­னா­லேயே பங்­குச்­சந்தை வியா­ப­ரத்தில் High Risk High Return எனும் தன்மை காணப்­ப­டு­வ­தாக வியா­பார நிபு­ணர்கள் கூறு­கின்­றனர்.

நட்டம் ஏற்­ப­டுமா? எவ்­வா­றான நட்டம் ஏற்­ப­டக்­கூடும்? அந்­நட்­டத்­தினை எவ்­வாறு தவிர்த்­துக்­கொள்ள முடியும்?

பங்குக் கொடுக்கல் வாங்­கல்கள் மேற்­கொள்ளும் நேரங்­களில் ஒரு­வரின் நுட்­ப­மான சந்தை கண்­கா­ணிப்­பி­னிலே இலாப நட்டத் தன்­மை­யா­னது அமை­கின்­றது. இலாப நட்ட நிலை ஒரு­வ­ரது கொடுக்கல் வாங்கல் திறன் நிலை­யிலும்  அதிகம் தங்கி உள்­ளது. சில சந்­தர்ப்­பங்­களில் ஒரு­சில கம்­ப­னி­களின் வினைத்­தி­ற­னற்ற செயற்­பாட்டின் மூலமும் பங்­கு­தா­ர­ருக்கு நட்டம் ஏற்­ப­டலாம். எனேவே மிகவும் அவ­தா­ன­மா­கவும் சிறந்த ஆலோ­ச­னை­க­ளைப் பெற்றும் அதற்­கி­னங்க மிகவும் இலாபம் பெறும் பங்­கு­களை அல்­லது நல்ல வினைத்­தி­ற­னுள்ள நிறு­வ­னத்தின் பங்­கு­களை வேண்டி விற்கும் பொழுது இவ்­வா­றன நட்­டத்­தினைத் தவிர்த்­துக்­கொள்ளக் கூடி­ய­தாக இருக்கும். இதுவே Investing in Company Shares which has Long Term high profitability எனப்­படும்.

முக்­கி­ய­மாக இலாபம் தரக்­கூ­டிய துறைகள் எவை என்றும் நல்ல நிறு­வ­னங்கள் என்­னென்­ன­வென்றும் தெரிந்து வைத்­துக்­கொள்ள வேண்டும். “பங்­குச்­சந்தை விளை­யாட்டு” மிகுந்த கவ­னத்­துடன் ஆடப்­ப­ட­வேண்­டிய ஒரு விளை­யாட்டு. விழிப்­புடன் இருந்து முடி­வு­களை உட­ன­டி­யாகச் செய்­வது மிக­மிக அவ­சி­ய­மாகும். நாள் வணி­கத்தில் (Daily Share Trading) ஈடு­ப­டு­ப­வர்கள் தொடர்ந்து சந்­தையைக் கண்­கா­ணித்து வர­வேண்டும். 