ரிஷாத், அசாத், ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக மொத்த 27 முறைப்பாடுகள்

Published By: Vishnu

13 Jun, 2019 | 08:27 PM
image

(எம்.எப்.எம். பஸீர்)

பதவி துறந்த முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகிய மூவருக்கும் எதிராக பொலிஸ் தலைமையகத்துக்கு மொத்தமாக  27 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குனசேகர கூறினார்.

கடந்த 4 ஆம் திகதி முதல் இன்று மாலை நான்கு மணி வரை குறித்த மூவருக்கும் எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்ய பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் இரு பொலிஸ் அத்தியட்சர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.  அந்த குழுவுக்கே இந்த 27 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றதாக அவர் மேலும் கூறினார்.

இந்த 27 முறைப்பாடுகளில்  முறைப்பாடுகளில் அதிகமானவை முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராகவே கிடைக்கப் பெற்றுள்ளன. 

இந் நிலையில் இந்த முறைப்பாடுகள் தொடர்பிலான  மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பு சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கையளிக்கப்பட  ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19