Prestige இன் புதிய சமையலறை சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ள சிங்கர்

30 Nov, 2015 | 11:00 AM
image

சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி, நவீன காலத்து குடும்பங்கள் மத்தியில் அதிகரித்து வருகின்ற தேவைகளை ஈடுசெய்யும் வகையில் தனது உற்பத்தி வரிசையினை மேலும் நீட்டித்து புதிய உயர் தரத்திலான Prestige உற்பத்திகள் பலவற்றை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

நீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்கள் விற்பனையில் நாட்டில் முதலிடத்தில் திகழும் நிறுவனமான சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி, நவீன காலத்து குடும்பங்கள் மத்தியில் அதிகரித்து வருகின்ற தேவைகளை ஈடுசெய்யும் வகையில் தனது உற்பத்தி வரிசையினை மேலும் நீட்டித்து புதிய உயர் தரத்திலான Prestige உற்பத்திகள் பலவற்றை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

கண்ணாடியிலான மேற்புறத்தைக் கொண்டுள்ள Prestige குக்கர், Prestige Mixer கிரைன்டர், Prestige Wet கிரைன்டர் மற்றும் Prestige Stainless Steel பிரஷர் குக்கர்கள் மற்றும் Prestige non-stick சமையல் பாத்திர உற்பத்தி வரிசைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இவற்றை அறிமுகப்படுத்தும் நிகழ்வு BMICH மண்டபத்தில் இடம்பெற்ற 5 ஆவது சிங்கர் Lifestyle கண்காட்சியில் சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி நிறுவனத்தின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ் மற்றும் இந்தியாவின் TTK Prestige நிறுவனத்தின் ஏற்றுமதித்துறையின் பொது முகாமையாளரான நரசிங் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.  

இந்த அறிமுக நிகழ்வில் “ Prestige - இல்லத்தரசிகள்” பெருமை என்ற வர்த்தகநாமத்தின் ஊக்குவிப்பு வாக்கியமும் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், சமையல் கலை நிபுணரான டொன் ஷேர்மன் அவர்கள் புதிய உற்பத்தி வரிசை தொடர்பாக நிகழ்த்திய செயல் விளக்கத்தை கண்காட்சியில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் நேரடியாக கண்டு அனுபவிக்கும் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியாவில் மிகப் பாரிய சமையலறை தீர்வுகள் வழங்குனராக Prestige நிறுவனம் திகழ்வதுடன், மிகவும் விசாலமான சமையலறை உற்பத்திகளையும் கொண்டுள்ளது.  சமையலின் போது பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு, அனைவரும் சாமர்த்தியமாக சமைப்பதற்கு உதவி, அவர்களின் நேரத்தையும், வலுவையும் சேமித்து, ஆரோக்கியமான முறையில் வாழ்வினை முன்னெடுப்பதற்கு Prestige வர்த்தகநாமம் உள்நாட்டில் அனைத்து இல்லங்களுக்கும் ஒட்டுமொத்த சமையலறை தீர்வுகளை வழங்கிவருகின்றது.

ஏராளமான இலங்கையர்களின் இதயங்களில் குடிகொண்டுள்ள வர்த்தகநாமமாக Prestige திகழ்வதுடன், சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தினூடாக கடந்த காலங்களில் இந்த வர்த்தகநாமம் சம்பாதித்துள்ள விசுவாசத்திற்கு பிரஷர் குக்கர் பிரிவில் அது சந்தையில் தனித்துவமான தலைமை ஸ்தானத்தை வகித்துவருவது சிறந்த ஒரு உதாரணமாகும்.  

இந்நிகழ்வில் தனது கருத்தை வெளிப்படுத்திய சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி நிறுவனத்தின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ்,

“பிரத்தியேகமான விநியோக பங்குடமையின் ஊடாக கடந்த இரு தசாப்தங்களுக்கும் மேலாக சிங்கர் நிறுவனம், Prestige வர்த்தகநாமத்துடன் தனது நெருக்கமான தொடர்புகளைப் பேணிவந்துள்ளது. ஒரு உற்பத்தி என்ற வகையில் மிகவும் உயர் தரம் கொண்ட உற்பத்தியாக Pசநளவபைந திகழ்வதுடன், இந்த உற்பத்திகளைக் கொண்டிருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் ஒரு “கௌரவமாகவே” கருதப்படுவதுடன், வாடிக்கையாளர்களின் வாழ்க்கைமுறையைக் கருதுகையில் எவ்விதமான சந்தேகங்களும் இன்றி அத்தியாவசியமானதாகக் காணப்படுகின்றது” என்று கூறினார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் “தரம், பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் ஆகிய அம்சங்கள் தொடர்பில் அதிக விழிப்புணர்வைக் கொண்ட நவீன இல்லங்களில் Pசநளவபைந வர்த்தகநாமத்தை மேலும் விஸ்தரிக்கும் வகையில் இன்று புதிய உற்பத்தி வரிசைகளை அறிமுகப்படுத்துவதையிட்டு நாம் மிகவும் பெருமிதம் அடைந்துள்ளோம். 

உங்களது சமையலறை தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான ஒரு தெரிவாக Prestige காணப்படுகின்றது. ஒரு இல்லத்தின் இதயமாகத் திகழும் சமையலறையில் கட்டாயமாகக் கொண்டிருக்க வேண்டிய ஒரு வர்த்தகநாமமாக Pசநளவபைந மாறியுள்ளதை கட்டாயமாக குறிப்பிட்டே ஆக வேண்டும்” என்று கூறினார்.   

பாதுகாப்பு, புத்தாக்கம், நீடித்த உழைப்பு மற்றும் நம்பிக்கை ஆகிய தூண்களை ஆதாரமாகக் கொண்டு Prestige வர்த்தகநாமம் கட்டியெழுப்பப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு நவீன சமையலறையின் தேவைப்பாடுகளையும் பூர்த்திசெய்வதற்கான முதற் தெரிவாக இந்த வர்த்தகநாமம் மாறியுள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைபெற்றுள்ள Pசநளவபைந சமையலறை மற்றும் சமையல் உற்பத்திகள், தொடர்ச்சியான புத்தாக்கத்தை அறிமுகப்படுத்தி வந்துள்ளமை ஏராளமான இலங்கை மக்கள் மத்தியில் நேசிக்கப்படுகின்ற மற்றும் போற்றப்படுகின்ற வர்த்தகநாமமாக அது மாறுவதற்கு ஏதுவாகியுள்ளது. சிங்கருடன் இணைந்து கடந்த காலங்களில் அது கட்டியெழுப்பியுள்ள உற்பத்தியின் தரம் மற்றும் நம்பிக்கை என்ற உண்மையில் தனித்துவமான ஒரு விடயமாகும்.

உதாரணத்திற்கு, பிரஷர் குக்கர்கள் virgin aluminum stainless steel என்ற துருப்பிடிக்காத உருக்கினைக் கொண்டு தயாரிக்கப்படுவதுடன், அவை அதியுயர் தரம், மின்வலு சேமிப்பு மற்றும் நேரத்தை சேமிப்பவையாகவும் உள்ளன. சிங்கரின் கிரைன்டர் உற்பத்தி வரிசையில் ஒரு முன்னணி உற்பத்தியாகத் திகழ்கின்ற mixture கிரைன்டர் சர்வதேசரீதியாகCB சான்று அங்கீகாரம் பெற்றுள்ளன.

அவை மின்னியல் மற்றும் இலத்திரனியல் பாகங்கள், உபகரணம் மற்றும் உற்பத்திகளின் பாதுகாப்பு தொடர்பில் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்பட்ட சோதனை அறிக்கைகள் மற்றும் சான்று அங்கீகாரங்களை உலகில் முதன்முதலாக சர்வதேச முறைமைக்கு அமைவாகப் பெற்றுள்ளன. 2 லீட்டர் கொள்ளளவுத்திறன் கொண்ட Wet கிரைன்டர் நவீன உலகில் பாரம்பரிய அரைத்தல் முறைகளை இணைத்து, உயர் தரம் கொண்ட அரைக்கும் கற்களைக் கொண்டுள்ளன. Non-Stick சமையல் உற்பத்தி வரிசை ஐந்து அடுக்கு கிரனைட்டு மேற்பாகத்தைக் கொண்ட இந்தியாவின் முதலாவது Non-stick சமையல் உற்பத்தி வரிசையாகத் திகழ்வதுடன், ஆரோக்கியமானவையாகவும், அனைவரின் சமையல் தேவைகளுக்கான சிறந்த தெரிவாகவும் காணப்படுகின்றன. 

இந்தியாவின் TTK Prestige நிறுவனத்தின் ஏற்றுமதிப் பிரிவின் பொது முகாமையாளரான நரசிங் ராஜ்குமார் கருத்துத் தெரிவிக்கையில்,

“ஒரு சர்வதேச வர்த்தகநாமமான Prestige கடந்த பல தசாப்தங்களாக சிங்கருடன் இணைந்து செயற்பட்டு வந்துள்ளது. ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட தேவைகளை இனங்கண்டு இலங்கையிலுள்ள நுகர்வோருக்கு புத்தாக்கமான உற்பத்திகளை தனித்துவமாக வழங்குவதற்கு சிங்கர் நிறுவனம் Prestige உடன் இணைந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வேலைப்பளுவிற்கு மத்தியில் குறைந்த நேரத்தில் ஒட்டுமொத்த வீட்டு வேலைகளையும் நிர்வகிக்கும் சவால் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதை நாம் தெளிவாக புரிந்துகொண்டுள்ளோம். சிங்கருடன் இணைந்து, குறைந்த முயற்சியுடன் மகிழ்வாக சமையலை மேற்கொள்வதற்கு கைகொடுக்கின்ற புத்தாக்கமான, உயர் தரத்திலான உற்பத்திகளை தொடர்ந்தும் அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் Prestige செயற்பட்டு வருகின்றது” என்று குறிப்பிட்டார்.  

Prestige உற்பத்திகள் அனைத்தும் TTK Prestige Limited நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவின் மிகப் பாரிய சமையல் சாதனங்கள் நிறுவனமாக வளர்ச்சி கண்டுள்ள இந்நிறுவனம், நாட்டில் இல்லத்தரசிகளின் தேவைகளை பூர்த்திசெய்து வருகின்றது. ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மீது பெருமளவான முதலீடுகளை மேற்கொண்டு ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஆசிய ஏற்றுமதி சந்தைகளில் ஒவ்வொரு வீட்டிலும் மக்களின் இதயங்களில் நிலைபெற்றுள்ள வர்த்தகநாமமாக Prestige திகழ்ந்து வருகின்றது. 

உத்தரவாதத்துடன் அதிசிறந்த தரத்திலான தீர்வுகளை வழங்குதல் மற்றும் ஈடுஇணையற்ற விற்பனைக்குப் பின்னரான சேவை ஆகியவற்றின் காரணமாக எவ்விதமான மாற்றுக்கருத்துக்களுக்கும் இடமின்றி சிங்கர் கொண்டுள்ள நன்மதிப்பு வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி சேர் பலனைக் கொடுக்கும். உலகிலுள்ள மிகச் சிறந்த வர்த்தகநாமங்களைக் கொண்டுள்ள பாரிய உற்பத்தி வரிசைகளுடனான நிறுவனமாக தற்போது சிங்கர் ஸ்ரீலங்கா திகழ்ந்து வருவதுடன், 400 இற்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை காட்சியறைகள் மற்றும் 200 இற்கும் மேற்பட்ட பேணற்சேவை நிலையங்களையும் கொண்டுள்ளது. நாட்டில் மிகவும் பாரிய நுகர்வோர் சாதனங்கள் விற்பனையாளர் என்ற தலைமைத்துவ ஸ்தானத்தை அது கட்டியெழுப்பியுள்ளது. சிங்கர் பிளஸ், சிங்கர் மெகா, சிசில் வேர்ல்ட் மற்றும் நாடளாவியரீதியிலுள்ள சிங்கரின் முகவர் வலையமைப்பு அடங்கலாக வாடிக்கையாளர்கள் எந்தவொரு சிங்கர் விற்பனை காட்சியறைக்கும் சென்று, இந்த பண்டிகைக்காலத்தில் தமக்குத் தேவையான சாதனங்களை வாங்கி, அனுபவித்து, மகிழலாம்.  

மேன்மையான சேவையை வழங்குவதில் 164 ஆண்டுகள் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ள சிங்கர், இன்று பல்வேறு வர்த்தகநாமங்களை அடக்கிய அதன் உற்பத்தி வரிசைகளுக்காக பெயர்பெற்று விளங்குகின்றது. சிங்கர் உற்பத்தி வரிசைகளை அனைவரும் இலகுவாகக் கொள்வனவு செய்வதற்காக நிறுவனம், நாடளாவியரீதியில் விசாலமான வலையமைப்புடன், உறுதியான பிரசன்னத்தைக் கொண்டுள்ளது. இலங்கையில் ஒவ்வொரு நுகர்வோரினதும் தேவைகளை இனங்கண்டு, மதிப்பளிக்கும் நிறுவனம் அனைத்து இலங்கை மக்கள் மத்தியிலும் விரும்பப்படுகின்ற வர்த்தகநாமமாகத் திகழ்ந்து வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்