தாஜ்மஹாலை 3 மணி நேரத்திற்கும் மேல் பார்வையிட்டால் அபராதம்

Published By: R. Kalaichelvan

13 Jun, 2019 | 06:30 PM
image

 ஆக்ராவில் அமைந்துள்ள  உலக அதிசங்களில் ஒன்றான தாஜ் மஹாலை பார்வையிட  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர்.

இந்நிலையில் தாஜ்மஹாலை அதிக நேரம் பார்வையிடுபர்களுக்கு  அபராதம் கேட்படுகின்றது.

அதாவது தாஜ்மஹாலை பார்வையிட நாளொன்றுக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். 

இதனிடையே பெறுமலவிலானோரின்  வருகை அதிகளவில் காணப்படுவதால் இவ்வாறன செயற்பாடு அங்கு அமுல்படுத்தப்பட்டளது.

முகலாய மன்னன் ஷாஜகானால், 22,000 பணியாட்களைக் கொண்டு முழுக்க பளிங்குக் கற்களால் இறந்து போன அவனது மனைவி மும்தாஜ் நினைவாக கட்டப்பட்ட காதல் சின்னம் தாஜ்மஹால். இக் கட்டிடம் 1631 முதல் 1654 ம் ஆண்டுகளுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது. 

இப்படிப்பட்ட புகழ் வாய்ந்த தாஜ்மஹாலை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளின் அதிகரிப்பால் கடந்த ஆண்டு தாஜ் மஹாலின் நுழைவுக்கட்டணம் அதிகரிக்கப்பட்டதுடன் உத்தரப்பிரதேச அரசு, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றொரு அதிரடி உத்தரவை பிறப்பித்தது. 

அதாவது தாஜ் மஹாலை சுற்றி பார்க்க வருவோர், அதிகபட்சமாக 3 மணி நேரம் மட்டுமே பார்வையிடலாம் என அறிவித்தது செயற்பாட்டிற்கு கொண்டு வந்திருந்தது. 

தாஜ்மஹால் வளாகங்களில் சமீபத்தில் டெர்ன்ஸ்டைல் கேட்டுகள் பொருத்தப்பட்டன. 

இதன் உதவியுடன் தாஜ் மஹாலுக்குள் அனுமதிக்கப்பட்ட 3 மணி நேரத்திற்கும் மேல் சுற்றுலா பயணிகள் தரித்திருந்தால், நுழைவுக்கட்டணத்தின் விலையே அபராதமாக விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிநுட்பத்தின்படி பயணிகள் பெறும் நுழைவு சீட்டானது 3 மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் 3 மணி நேரம் கடந்து  ஒரு நிமிடம் ஆனாலும் சுற்றுலாப் பயணிகள் , நுழைவுக்கட்டணத்தை அதிகாமாக கட்டவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right