(செ.தேன்மொழி)

அம்பலாங்கொட , கல்கிஸ்ஸ , கெகிராவ மற்றும் வெள்ளம்பிடிய ஆகிய பகுதிகளில் நேற்று பொலிஸாரும் , குற்றத்தடுப்பு பிரிவினரும் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயினுடன் நால்வர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன்போது அம்பலங்கொடயில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் 450 மில்லி கிராம் ஹெரோயினும், கல்கிஸ்ஸையில் கைது செய்யப்பட்டவரிடமிருந்து 3 கிராம் 335 மில்லிகிராமும் ,கெகிராவை சந்தேக நபரிடமிருந்து  5 கிராம் 900 மில்லி கிராமும் வெள்ளம்பிடிய சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் 30 மில்லி கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளது.

கஹவ , படோவிட, கண்டி மற்றும் கொழும்பு பகுதிகளைச் சேரந்த 29 - 46 வயதுக்கு இடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸார் சந்தேக நபர்களை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.