விடுமுறையைக் கழிப்பதற்காக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்து குடும்பம் ஒன்று இந்தோனேசியாவின் பாலி வனப்பகுதிக்கு சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டிருந்தது.

ஐந்து அங்கத்தவர்களைக் கொண்ட அந்த குடும்பத்தினர்  சுற்றுலா மேற்கொண்ட குரங்கு வனப்பகுதியில் எதிர்பாராது நடந்த நிகழ்வொன்று அவர்களை வியப்பில் ஆழ்த்தியது.  

காட்டுப்பகுதியில் ஒரு இடத்தில் குடும்பத்தினர் சேர்ந்து புகைப்படம் எடுப்பதற்காக தானியங்கும் கமராவை ஒழுங்கு செய்து காத்திருந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் வனத்தில் வாழும் குரங்கு ஒன்று கமராவின் முன் தோன்றி தமது நடுவிரலினால் கமராவை இயக்க முற்பட்டது. 

இந்த வியப்பு மிக்க நொடியினை தானியங்கி கமரா பதிவு செய்ததைத் தொடர்ந்து குரங்கு மீண்டும் சென்றுவிட்டது. 

குரங்குகள் அறிவுத்திறன் மிக்கவை,எனினும் பழக்கப்படுத்தப்படாத காட்டில் வாழும் ஒரு குரங்கு பிறரின் செயற்பாடுகளை அவதானிப்பதன் மூலம் அதை புரிந்து செயற்படுவது சமூகவலைத்தளங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.