' நான் செல்கிறேன் இனி வரமாட்டேன்' :  பதிவு விதியானது : மனதை உருக்கும் புது தகவல்கள்

Published By: MD.Lucias

01 May, 2016 | 01:07 PM
image

பம்­ப­ல­ப்பிட்டி முதல் தெஹி­வளை வரை­யி­லான கரை­யோர ரயில் பாதை தொடர்பில் புதி­தாக விளக்கம் ஒன்றும் அவ­சி­ய­மில்லை. ஏனெனில் இந்த தண்­ட­வா­ளப்­ப­கு­தியில் அடிக்­கடி ரயிலில் மோதி பலர் உயி­ரி­ழப்­பது தொடர்ச்­சி­யாக இடம்­பெற்ற வண்­ணமே உள்­ளது. கவ­ன­யீனம் கார­ண­மா­கவும் அவ­தா­ன­மின்­மை­யுமே இந்த உயி­ரி­ழப்­புக்­க­ளுக்கு கார­ணங்கள் என கடந்த கால சம்­ப­வங்­களை வைத்து பொலிஸார் கோடிட்டு காட்­டு­கின்­றனர்.

இந் நிலையில் தான் கடந்த 25 ஆம் திகதி அதே கரை­யோர ரயில் மார்க்­கத்தில், தெஹி­வளை ரயில் நிலை­யத்தை அண்­மித்த பகு­தியில் ரயிலில் மோதுண்டு இரு மாண­வியர் பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்த சம்­பவம் முழு நாட்­டையும் ஒரு கணம் திரும்பிப் பார்க்க வைத்­தது.

ஆம் அது கடந்த 25 ஆம் திகதி இரவு வேளை. நேரமோ இரவு 7.30 மணி இருக்கும். தெஹி­வளை பொலிஸ் நிலை­யத்­துக்கு 119 ஊடாக ஒரு தகவல் வந்­தது. ' சேர்.. வாசல வீதிக்கு அருகில் உள்ள தண்­ட­வா­ளத்தில் ரயிலில் மோதி இரு பெண்கள் உயி­ரி­ழந்­துள்­ளனர்...' என அந்த அழைப்பை ஏற்­ப­டுத்­தி­யவர் பொலி­ஸா­ரிடம் கூறவே உட­ன­டி­யாக பொலிஸ் குழு­வொன்று ஸ்தலத்­துக்கு விரைந்­தது.

ஸ்தலம் செல்லும் போது அங்கு பெரும் எண்­ணிக்­கை­யி­லா­ன­வர்கள் கூடி­யி­ருந்த நிலையில், ரயிலும் நிறுத்­தப்­பட்­டி­ருந்­தது. ரயில் பாதையின் இரு வேறு இடங்­களில் இரு யுவ­தி­களின் சட­லங்­களும் சிதறிக் காணப்­பட்­டன. அருகே மேலும் சில இளைஞர், யுவ­திகள் உரத்து அழு­து­கொண்­டி­ருந்­தனர். இவற்றை அவ­தா­னித்த பொலிஸார் அழு­து­கொண்­டி­ருந்த இளைஞர், யுவ­தி­க­ளுக்கும் ரயிலில் மோதுண்ட இரு யுவ­தி­க­ளுக்கும் தொடர்­புகள் ஏதும் இருக்க வேண்டும் என்ற கோணத்தில் சிந்­தித்து அங்­கி­ருந்து இரு யுவ­திகள் குறித்த தகவல் சேக­ரிக்கும் பணியை தொடங்­கினர்.

இதன்­போதே ரயிலில் மோதுண்ட இரு­வரும் பாட­சாலை மாண­வியர் என்­பது தெரி­ய­வந்­தது. ஒருவர் வெள்­ள­வத்தை, டப்­ளியூ.ஏ.சில்வா மாவத்­தையைச் சேர்ந்த ஷெரோன் வெரோ­னிகா. மற்­றை­யவர் களனி சிங்­கா­ர­முல்லை பகு­தியைச் சேர்ந்த இமேஷி யசாரா பெரேரா. இரு­வரும் பம்­ப­லப்­பிட்டி பகு­தியில் உள்ள பிர­பல பாட­சா­லை­யொன்றின் மாண­வியர்.

இந்த ஆரம்­ப­கட்ட தக­வல்­க­ளுடன் தெஹி­வளை பொலிஸார், உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர் ரஞ்சித் கொட்­டச்­சியின் ஆலோ­ச­னைக்கு அமைய மேல­திக விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர். இதற்­காக விபத்து இடம்­பெற்ற பகு­தியில் இருந்த ஹோட்­டலில் சீ.சீ.டி.வி. கண்­கா­ணிப்பு கமரா பதி­வு­க­ளையும் பொலிஸார் ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தினர்.

இந்த விசா­ர­ணை­களின் போதுதான், கடற்­க­ரை­யோ­ரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த பிறந்த நாள் 'பார்ட்டி ' ஒன்று தொடர்­பி­லான தக­வல்கள் தெரி­ய­வந்­தன.

ஆம், ரயிலில் மோதுண்டு உயி­ரி­ழந்த இமேஷி எனப்­படும் மாணவி காத­லித்து வந்­த­தாக கூறப்­படும் இளை­ஞனின் பிறந்த நாள் கொண்­டாட்­டமே அது. இது குறித்த தக­வல்­களை உயி­ரி­ழந்த அந்த இரு மாண­வி­ய­ரையும் அவ்­வி­டத்­துக்கு அழைத்து வந்த அவர்­களின் நண்­ப­ரொ­ருவர் பேஸ் புக் சமூக வலைத்­த­ளத்தில் சம்­ப­வத்தை இப்­படி பதி­விட்­டுள்ளார்.

' இமேஷி (உயி­ரி­ழந்த மாண­வி­யர்­களில் ஒருவர்) தனது காத­ல­னான ஷாமிக்­கவின் பிறந்த நாளைக் கொண்­டாட, அவ­ருக்கு புது­மை­ய­ளிக்கும் வித­மாக 'சப்ரைஸ் பேர்த் டே பார்ட்டி' ஒன்­றினை தெஹி­வளை கடற்­க­ரையில் உள்ள ஒரு ஹோட்­டலில் ஏற்­பாடு செய்தார். இது தொடர்பில் காத­ல­னான ஷாமிக்­க­வுக்கு அழைப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ள இமேஷி, ஜோன்ஸன் உங்­க­ளுக்கு ஒரு பிறந்த நாள் பார்ட்­டியை ஏற்­பாடு செய்­துள்ளார். நீங்கள் தெஹி­வளை கடற்­கரை பகு­தியில் உள்ள அந்த இடத்­துக்கு வாருங்கள் என கூறினார்.

நான் இமேஷி, ஷரோன் மற்றும் ஷாமிக்­கவின் தம்பி ஆகி­யோரை காரில் ஏற்­றிக்­கொண்டு வெள்­ள­வத்­தையில் இருந்து அந்த இடத்­துக்கு சென்றேன்.

அப்­போது ஷாமிக்க அந்த இடத்­துக்கு வரு­வதை நாம் அவ­தா­னித்தோம். ஷாமிக்­கவை கண்­டதும் இமேஷி நாம் அவ­ச­ர­மாக மற்ற பக்­கத்­துக்கு (பிறந்த நாள் கொண்­டாட்டம் ஏற்­பாடு செய்­யப்­படும் இடத்­துக்கு) செல்வோம் எனக் கூறி ஷெரோ­னையும் அழைத்­துக்­கொன்டு போக முற்­பட்டாள். அப்­போது நான் ' இமேஷி நாங்கள் காரை பார்க் செய்­து­விட்டு வரும் வரையில் இருங்கள். எல்­லோரும் ஒன்­றாக போகலாம் என்றேன்.

அப்­போது இமேஷி, ஜோன்ஸன் நீ வரு­வது ஷாமிக்­க­வுக்கு எப்­ப­டியும் தெரியும். அதனால் உன்னை அவன் காண்­பதால் பிரச்­சினை இல்லை. நாங்கள் வரு­வது அவ­னுக்கு தெரி­யாது. ஆகையால் நாம் அவ­ச­ர­மாக மறு­பக்கம் சென்று ஷாமிக்­கவை சப்ரைஸ் செய்ய தயா­ராக இருக்­கின்றோம் என கூறி இமே­ஷியும் செரோனும் காரில் இருந்து இறங்கி சென்­றனர். நான் காரை பார்க் செய்­து­விட்டு வரும் போது ரயில் ஒன்று நின்­றி­ருக்க, அதனை சுற்றி பலர் கூடி­யி­ருந்­தனர். ஏதோ விபத்து என தெரி­யவே நான் அவ்­வி­டத்­துக்கு சென்ற போது யுவ­திகள் இருவர் ரயிலில் மோதி உயி­ரி­ழந்­த­தாக அங்­கி­ருந்த ஒருவர் மூல­மாக தெரிந்­து­கொண்டேன். அதன் பின்னர் பார்த்த போதே அது இமே­ஷியும், ஷெரோனும் என தெரிந்த போது சத்தம் போட்டு அழு­து­விட்டேன். எனது காரில் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்வோம் எனக் கூறினேன். எனினும் அவர்கள் உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக அங்­கி­ருந்­த­வர்கள் கூறினர்.

அப்­போது ஷாமிக்­கவும் பாதையின் மறு­பு­றத்தில் இருந்தான். நான் அவனை அழைத்து ' ரயிலில் மோதி­யி­ருப்­பது இமே­ஷியும், ஷெரோ­னுமா என்று பாரு என அவ­னிடம் கூறினேன். அவன் பார்த்­து­விட்டு கத­றி­ய­ழுதான். ஷெரோனின் உடலில் பாரிய சேதங்கள் இருக்­க­வில்லை. இமே­ஷியின் உடல் பாகங்கள் சிதறிக் கிடந்­தன.

அப்­போது பிறந்த நாள் கொண்­டாட்­டத்­துக்கு அங்கு வந்த நண்­பர்கள் அனை­வரும் அவ்­வி­டத்தில் கூடி கத­றி­ய­ழுதோம்' என தனது முகப் புத்­தக பக்­கத்தில் விபத்தை விப­ரித்­தி­ருந்தார். உயி­ரி­ழந்த யுவ­தி­களின் நண்பர் ஜோன்ஸன்.

இது குறித்து பொலிஸார் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் காரில் இருந்து இறங்­கிய இவ்­விரு மாண­வி­யரும், காதில் இயர் போன்கள் இருந்த நிலை­யி­லேயே அவ­சர அவ­ச­ர­மாக ரயில் பாதையின் குறுக்­காக கடற்­கரை பகு­தியை நோக்கி ஓடி­யுள்­ளனர். இதன் போதே மரு­தா­னையில் இருந்து தெற்கு களுத்­து­றையை நோக்கி வந்த ரயில் அவர்கள் மீது மோதி­யுள்­ளது.

அவ்­விரு மாண­வி­யரும் ரயில் பாதையின் குறுக்­காக ஓடும் போது ரயில் வரு­கி­றதா இல்­லையா என எத­னையும் அவ­தா­னிக்­க­வில்லை. அவ்­வாறு ஓடும் போது ரயில் வரு­வ­தாக அப்­ப­கு­தியில் இருந்த பலர் கூக்­கு­ர­லிட்­டுள்ள போதும் காதில் இருந்த இயர் போன் கார­ண­மாக அவர்­க­ளுக்கு வெளிச்­சத்தம் கேட்­டி­ருக்க வாய்ப்­பில்லை என பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர்.

பிறந்த நாள் கொண்­டாட்­டத்­துக்கு செல்­வதை இரு வீட்­டா­ருமே அறிந்­தி­ருந்­ததால் அவர்கள் அந்த நேரத்­திற்கு தமது மகள்­மாரை தேடி­யி­ருக்க வாய்ப்­பில்லை. எனினும் சிறிது நேரத்தில் அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட தக­வல்­களால் அவ்­விரு மாண­வி­யரின் குடும்­ப­முமே அதிர்ச்­சியில் உறைந்து போயி­ருக்கும்.

உண்­மையில் இந்த இரு மாண­வி­யரில் ஒருவர் இற்­றைக்கு ஒரு வரு­டத்­துக்கு முன்னர் தனது இன்ஸ்­டர்­கிராம் சமூக வலைத்­த­ளத்தில் தண்­ட­வா­ளத்தில் இருந்­த­வாறு ஒரு புகைப்­ப­டத்தை பதி­வேற்றி அதில் ' நான் ரயிலில் மோதுண்டு இறந்­தாலே தவிர, தனக்கு தேவை­யா­ன­வற்றை பெறு­வதை யாராலும் தடுக்க முடி­யாது' என ஒரு பதிவை இட்­டுள்ளார்.

அதே போன்று மற்­றொரு மாணவி இரு வரு­டங்­க­ளுக்கு முன்னர் தனது பேஸ் புக் சமூக வலைத்தளத்தில் ஏப்ரல் 25 ஆம் திகதி இட்டுள்ள பதிவில் ' நான் செல்கிறேன் இனி வரமாட்டேன்' என பதிந்துள்ளார்.

இந் நிலையில் இந்த பதிவுகள் குறித்து அம்மாணவியரின் நண்பர்கள் தற்போது அதிர்ச்சியடைகின்றனர்.

மாணவியர் ரயிலில் மோதுண்டு இறந்தது விதியாக இருக்கலாம். ஆனால் இனிமேல் விதியை மதியால் வெல்லும் நடவடிக்கைகள் அவசியம். இவை பம்பலப்பிட்டி, தெஹிவளை தண்டவாளப்பகுதியில் நடந்த கடைசி மரணமாக இருக்கட்டும். அவதானம், நிதானம் இரண்டையும் இழக்காமல் தமது இன்னுயிரினை காக்க பாதசாரிகள் அனைவரும் செயற்படுவது விபத்துக்களை தடுக்க மிக அவசியமாகும்.

-–எம்.எப்.எம்.பஸீர்– 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதுமை இயலாமையின் அடையாளம் அல்ல

2023-10-02 17:17:52
news-image

ஊட்­டச்­சத்து குறை­பாட்டில் உயர் மட்­டத்தில் நுவ­ரெ­லியா...

2023-10-02 17:18:14
news-image

அங்கீகரிக்க மறுத்தலை அடையாளமாக்குவோம்....!

2023-10-02 15:24:56
news-image

வடக்கு மாகாண சுற்றுலாத்துறைக்கு புத்துயிரூட்டிய 'கோடிலியா'

2023-10-02 15:24:27
news-image

2022ஆம் ஆண்டு நூறு கோடி ரூபாய்...

2023-10-02 13:35:16
news-image

இந்தியாவை கண்காணிக்கும் ஐந்து கண்கள்!

2023-10-02 09:09:54
news-image

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் 

2023-10-01 19:13:25
news-image

நீதி­பதி சர­வ­ண­ரா­ஜாவின் வெளி­யேற்றம் : பேரி­ன­வாதம்...

2023-10-01 19:15:04
news-image

பேரா­யரும் மைத்­தி­ரியும்

2023-10-01 19:15:29
news-image

மழை விட்டும் நிற்­காத தூவானம்

2023-10-01 19:15:56
news-image

வலிந்து மூக்கை நுழைத்த அலி சப்ரி

2023-10-01 19:16:10
news-image

மனித புதை­குழி அகழ்­வு­க­ளுக்கு போட்­டி­யாக தங்க...

2023-10-01 19:17:30