தமிழகத்திலுள்ள மாணவர்களின் கல்விக் கடன் மற்றும் விவசாயிகளின் விவசாய கடன்களை தமிழகத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மற்றும் தி.மு.க. மக்களவை உறுப்பினர்கள் செலுத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரான பொன் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக திருச்சி விமான நிலையத்தில் அவர் தெரிவித்ததாவது,

“தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. மற்றும் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் 37 பேரும் தங்களது சொத்துக்களை விற்று தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கவேண்டும். தமிழகத்தில் உள்ள மாணவர்களின் கல்விக் கடன் மற்றும் விவசாயிகளின் விவசாய கடன்களை இவர்கள் செலுத்தவேண்டும். மக்களவைத் தேர்தலில் மதவாத அரசியல் செய்தும், மக்களிடையே பொய் பிரச்சாரம் செய்தும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. இன்னும் எத்தனை ஆண்டுகாலம் மக்கள் ஏமாளிகளாக இருக்கப் போகிறார்கள்?” என்றார்.