தெரிவுக்குழுவின் செயற்பாடு மூலம் இறுதி தீர்வினை எட்ட முடியாது - மஹிந்த அமரவீர 

Published By: Vishnu

13 Jun, 2019 | 02:41 PM
image

(எம்.மனோசித்ரா)

தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் மூலம் ஒருபோதும் இறுதி தீர்வினை வழங்க முடியாது எனத் தெரிவித்த, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, குற்றம் செய்தவர்களுக்கு நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார். 

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காகவே தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது. ஆனால் அது முறையற்ற விதத்தில் செயற்படுகின்றது. ஊடக சந்திப்பைப் போன்று தெரிவுக்குழு விசாரணைகள் இடம்பெறுகின்றன. மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படாது தேசிய பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட, பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளவர்கள் தெரிவுக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஐக்கிய தேசிய கட்சியிலுள்ள சிலரும் அதிருப்தியிலுள்ளனர். 

தெரிவுக்குழு நியமனத்திற்கு நாம் கையெழுத்திடவில்லை. ஐக்கிய தேசிய கட்சியினர் அதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டமை மற்றும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டமையின் பின்னரே இதன் பாதூர தன்மை பற்றி சிந்தித்தோம். எவ்வாறிருப்பினும் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் ஒரு போதும் இறுதி தீர்வினை வழங்கப்போவதில்லை. ஆனால் குற்றம் செய்தவர்களுக்கு நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்படும் என்று உறுதியாகக் கூற முடியும். 

இம்மாத இறுதியில் இலங்கை வரவிருக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பம்பியோ இராணுவ விவகாரங்களில் செய்து கொள்ளவிருக்கும் ஒப்பந்தம் தொடர்பான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு இலங்கையை வலியுறுத்தவுள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த ஒப்பந்தத்தில் உள்நாட்டு இராணுவத்தினருக்கு உள்ள கைது செய்தல், வழக்கு தொடர்தல் , நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

ஆனால் அமெரிக்காவுடன் செய்துகொள்ளப்படவுள்ள இந்த ஒப்பந்தம் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதால் இதில் எமக்கு உடன்பாடு கிடையாது. 

வெளிநாடுகளுடன் முரண்பட வேண்டும் என்பது எமது நோக்கமல்ல. வெளிநாட்டு தொடர்புகள் இன்றி எம்மால் அபிவிருத்தியை துரிதப்படுத்தவும் முடியாது. ஆனால் அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்படவுள்ள இந்த ஒப்பந்தம் நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடையது என்பதால் இது குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 09:50:53
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17