அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் பல்தேசிய  போக்குவரத்து சேவை நிறுவனமான உபர்  ஆனது  தனது   பறக்கும் வாடகைக்  கார் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ள தனது  வாகனத்தை முதல் தடவையாக அறிமுகம் செய்து வைத்துள்ளது.

இதற்கு முன்  அந்த பறக்கும் வாடகைக் காரின்  மாதிரி வடிவமைப்புகள் மட்டுமே அந்த நிறுவனத்தால் வெளியிடப்பட்டிருந்தன.

ஒரு சமயத்தில் நால்வர் பயணிக்கக் கூடிய வசதியைக் கொண்ட மேற்படி வாகனம் 2020 ஆம் ஆண்டில் பரீட்சார்த்தமாக சேவையில்  ஈடுபடுத்தப்படவுள்ளதுடன்  அதன் வர்த்தக ரீதியான சேவை 2023 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படவுள்ளது.