அடிப்­ப­டை­வாத மதத் தீவி­ர­வாத  குழு­வொன்றின் உறுப்­பி­னர்­க­ளது மூளையை ஊடு­காட்டும் (ஸ்கான்)  பரி­சோ­த­னைக்கு  உட்படுத்தியபோது  அவர்­க­ளிடம் பகுத்­த­றியும் ஆற்றல் குறைவாகக் காணப்­ப­டு­வது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக  புதிய  ஆய்வொன்று தெரி­விக்­கி­றது.

ஸ்பெயின் பார்­சி­லோனா  நகரில் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த ஆய்வின்போது பாகிஸ்­தானைச் சேர்ந்த அடிப்­ப­டை­வாதக் குழு­வான லஷ்கார் ஈ தலி­பாவைச் சேர்ந்த 146 உறுப்­பி­னர்கள் ஆய்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டனர்.

அந்த உறுப்­பி­னர்­க­ளிடம் அவர்­களால்  தமது கொள்­கைக்­காக  போரா­டவும் மர­ண­ம­டை­யவும் விரும்­பு­வ­தற்கு எவ்­வாறு முடிகிறது என வின­வப்­பட்­டது. இந்த செயற்­கி­ர­மத்தின் போது அவர்கள்  எவ்­வாறு பதி­ல­ளிக்­கி­றார்கள் என்­பதைக் கண்­ட­றிய அவர்­க­ளது மூளை ஊடு­காட்டும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.

இதன்­போது அவர்­க­ளது மூளையின் செயற்­பா­டுகள் குறை­வாக இருப்­பது அவ­தா­னிக்­கப்­பட்­டது.

மத அடிப்­ப­டை­வாத கொள்­கையை பின்­பற்­று­ப­வர்­களின் மூளை­யா­னது  ஒரு செயற்­கி­ர­மத்­தி­லுள்ள நன்­மைகள் மற்றும் தீமை­களை  விவா­தத்­திற்கு உட்­ப­டுத்­துவதை இயல்­பாக எதிர்த்து நிற்­பதால்  அவர்கள்  தமது செயற்­பா­டுகள் தொடர்பில் பகுத்­த­றிய துணி­வ­தில்லை என ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

ஆய்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­ட­வர்கள் பொது­மக்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றை­களை மேற்­கொள்­வ­திலும்  தீவி­ர­வாத குழு­வொன்­றுடன் இணைந்து செயற்­ப­டு­வ­திலும்  வன்­முறை ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­ப­டு­வ­திலும் தமக்­குள்ள விருப்­பத்தை வெளியிட்­டுள்­ளனர்.

 மேற்­படி ஆய்வில் பங்­கேற்ற மிக்­சிக்கன் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த ஆய்­வா­ள­ரான ஸ்கொட் அட்ரன் தெரி­விக்­கையில்இ  எந்­த­வொரு நப­ரும் தான் எந்த மதத்தைச் சேர்ந்­த­வ­ரா­யினும் தனது சொந்த மத  நம்­பிக்கை அடிப்­ப­டை­யி­லான  தெரி­வு­களை மேற்­கொள்ளும்போது  அவரது மூளையின்  பாகங்­களின் செயற்­பா­டுகள் குறை­வா­க­வுள்­ளதை தாம் ஊடு ­காட்டும் பரி­சோ­த­னை­களின் போது கண்­ட­றிந்­த­தாக கூறினார்.