தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்  இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர்  தெரிவித்துள்ளார். 

தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக இருந்த சிசிர மெண்டிஸ் அண்மையில் இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.