வன்னி மாவட்ட பட்டதாரிகள் சங்கத்திற்கும் பாராளுமன்ற உறுப்பினருக்குமாக சந்திப்பு எதிர்வரும் சனிக்கிழமை வவுனியாவில் இடம்பெறவுள்ளதாக பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

வன்னி மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தில் தமது பதிவுகளை மேற்கொண்ட வேலையற்ற பட்டதாரிகளின் உண்மை நிலைமையினை ஆராயும் முகமாகவும், தற்போது  வேலையற்ற பட்டதாரிகள் எதிர்நோக்கும் விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித்தலைவரின் பட்டதாரிகளின் அரச நியமனம் மற்றும் இளைஞர் விவகாரத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவிற்குமான கலந்துரையாடல் சனிக்கிழமை மதியம் ஒருமணியளவில் வவுனியா சாந்தசோலையில் இடம்பெறவுள்ளதாக வன்னி மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.