திருகோணமலை  கடலில் சட்டவிரோதமான முறையில் மீன் பிடித்த ஐவரை  கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

திருகோணமலை - பெக்பே கடற் பரப்பில் சட்டவிரோத வலையினை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் 05 பேர் கடற்படையினால் கைதுசெய்துள்ளனர். 

கிழக்கு கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது  குறித்த சந்தேக நபர்கள்  நேற்று கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

திருகோணமலை, முள்ளிப்பத்தான பகுதியை சேர்ந்த நபர்களை இவ்வாறு கைது செய்ததோடு அவர்களிடமிருந்து  படகு ஒன்றையும் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.