சவூதியில் கைதான ஆயு­தப்­படை பிர­தானி மில்­ஹானை ஒப்­ப­டைக்கக் கோரும் இந்­தியா

By T. Saranya

13 Jun, 2019 | 10:48 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இலங்­கையில் இடம்­பெற்ற தொடர் தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டைய பிர­தான சந்­தேகநபர்­களில் ஒரு­வ­ராக கரு­தப்­படும், குறித்த கொடூர தாக்­கு­தல்­களை நடத்­திய தேசிய தெளஹீத் ஜமா அத் எனும் அமைப்பின் ஸ்தாபகர் சஹ்ரான் ஹாஷிம் எனும் பயங்­க­ர­வா­தியின் கீழ் செயற்­பட்ட குழுவின் ஆயுதப் பிரி­வுக்கு  பொறுப்­பாக இருந்த மொஹம்மட்  மில்ஹான் எனும் சந்‍­தே­க­ந­பரை இலங்­கைக்கு அழைத்து வந்து விசா­ரிப்­பதில் தொடர்ந்தும் சிக்­கல்கள் நில­வு­கின்­றன.  

இலங்கை உள­வுத்­துறை கொடுத்த தக­வ­லுக்கு அமைய , 21/4 பயங்­க­ர­வாத தாக்­குதல் நடாத்­தப்­பட்டு 24 மணி நேரத்­துக்குள் சவூதி அரே­பி­யாவில் வைத்து குறித்த சந்­தேக நபர் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். இந் நிலையில் சவூதி பயங்­க­ர­வாத தடுப்பு மையத்தில் தடுத்து வைக்­கப்பட்­டுள்ள மில்­ஹானை இலங்­கைக்கு அழைத்து வந்­து­வி­சா­ர­ணை­களை முன்­னெ­டுக்க, இராஜ தந்­திர மட்­டத்தில் முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

எனினும் இந்த பிர­தான சந்­தேக நப­ரான மொஹம்மட் மில்­ஹானை தம்­மிடம் ஒப்­ப­டைக்­கு­மாறு இந்­தியா சவூ­தி­யிடம் கோரிக்கை முன்­வைத்­துள்ள நிலையில், குறித்த முக்­கிய சந்­தேக நபரை இலங்­கைக்கு அழைத்­து­வ­ரு­வதில் சிக்கல் நிலை நில­வு­வ­தா­கவும் அதனால் இது­வரை அவரை அழைத்து வர முடி­யாமல் போயுள்­ள­தா­கவும் பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார்.

எவ்­வா­றா­யினும் உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்­டுத்­த­க­கு­தல்கள் குறித்த விசா­ர­ணை­க­ளுக்கு  மில்ஹான் எனும் குறித்த சந்­தேக நபர் மிக அவ­சி­ய­மான சந்­தேக நப­ராக சி.ஐ.டி. அடை­யாளம் கண்­டுள்ள நிலையில், அவரை அழைத்து வந்து விசா­ரிக்க சட்ட மா அதிபர், வெளி விவ­கார அமைச்சு, சவூ­தியில் உள்ள இலங்கை தூத­ரகம் ஊடாக முயற்­சிகள்  தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் எனினும் நேற்­று­வரை சாத­க­மான எந்த  நகர்­வு­க­ளையும் அவ­தா­னிக்க முடி­ய­வில்லை எனவும் அந்த அதி­காரி சுட்­டிக்­காட்­டினார்.

மில்ஹான் எனும் குறித்த நபர்  தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு முன்னர் சவூதி அரே­பி­யா­வுக்கு  உம்­ரா­வுக்­காக சென்­றி­ருந்தார்.   தொடர் தற்­கொலை தக­கு­தல்கள் அன்று அவர் மீள இலங்­கைக்கு திரும்ப ஏற்­பாடுச் செய்­யப்­பட்­டி­ருந்த போதும் மீள திரும்­ப­வில்லை. எனினும் அவ­ரது பயணப் பொதி மட்டும் இலங்­கைக்கு வந்­துள்­ளது.  இந் நிலையில் சவூதி விமான நிலையம் ஒன்றில் தாக்­கு­த­லை­ய­டுத்து தன்னை சி.ஐ.டி. தேடு­வதை தெரிந்­து­கொன்டு மில்ஹான் சவூ­தி­யி­லேயே ஒழிந்­தி­ருக்க முற்­பட்ட போது அந் நாட்டு பயங்­க­ர­வாத எதிர்ப்பு பிரி­வி­னரால்  கைது செய்­யப்ப்ட்­டுள்ளார். 

இவ்­வாறு  கைது செய்­யப்­பட்ட  குறித்த சந்­தேக நபர், யுத்த காலத்தில் காத்­தாண்­கு­டியில் இயங்­கி­ய­தாக நம்­பப்­படும் துணை  ஆயுதப் படை­களில் இருந்­தவர் என தக­வல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,  வவுண தீவு பொலிஸ் காவலரணில் கடமையாற்றிய  பொலிஸ் உத்தியோகத்தர்கள்  இருவரை கடந்த 2018 நவம்பர் மாதம் கொலை செய்த சம்பவத்தையும்  அவரே  நெறிப்படுத்தியுள்ளதாகவும்  தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right