கத்திக்குத்துக்கு இலக்காகிய பல்கலைக்கழக மாணவி வைத்தியசாலையில் அனுமதி..!

By Daya

13 Jun, 2019 | 11:49 AM
image

களனி பல்கலைக்கழத்திற்கு அருகில்  இன்று  இடம்பெற்ற கத்திகுத்துக்தாக்குதலுக்கு இலக்காகிய மாணவி ஒருவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

களனி பல்கலைக்கழத்திற்கு அருகில்  இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் மாணவி ஒருவர் படுகாயமடைந்த நிலையில்,  சிகிச்சைக்காக  றாகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில்  குறித்த  மாணவி  ஆபத்தான நிலையில் இல்லை என  மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.

மேலும், காதல் விவகாரம் தொடர்பில் இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பத்துடன் தொடர்புடைய காதலன்  கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிரிபத்தொகட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right