(ஆர்.யசி)

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் நாளைய தினம் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உறுப்பினரும் முன்னாள் பொலிஸ்மா அதிபருமான என்.கே.இலங்ககோன் ஆகியோர்  சாட்சியமளிக்கவுள்ளனர்.

ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதலை அடுத்து நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் கடந்த அமர்வுகளில் பாதுகாப்பு பிரதானிகள் மற்றும் அரசியல், முஸ்லிம் மத தலைவர்களை வரவழைத்து விசாரணைகளை நடத்தியிருந்தது. 

அதன் அடுத்த கட்டமாக  நாளை பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தெரிவுக்குழுவின் அமர்வில் இவர்கள் சாட்சியமளிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.